பாஜக நிர்வாகி முகுல் ராய் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்

பாஜக தேசிய துணைப் பொதுச்செயலாளராக பதவி வகித்த முகுல் ராய், மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
x
மேற்கு வங்காளத்தை சேர்ந்த முகுல் ராய், 1998 முதல் திரிணாமுல் காங்கிரசில் இருந்து வந்த நிலையில், அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் மம்தா, 2015ஆம் ஆண்டு, முகுல் ராயை கட்சியில் இருந்து 6 ஆண்டுகள் நீக்கினார். இதனை தொடர்ந்து 2017ஆம் ஆண்டு முகுல் ராய் திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்தார். இதையடுத்து அவருக்கு பாஜக தேசிய துணைப்பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
சமீபத்தில் நடந்து முடிந்த மேற்குவங்க தேர்தலில் கிருஷ்ணாநகர் உத்தர் தொகுதியில் பாஜக சார்பில்  போட்டியிட்டு, முகுல் ராய் வெற்றி பெற்றார். இந்நிலையில், முகுல் ராய் மீண்டும் மம்தா பானர்ஜி முன்னிலையில், தமது மகனுடன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.  

Next Story

மேலும் செய்திகள்