"சுற்றுச்சூழலை பாதிக்கும் திட்டத்திற்கு அனுமதி இல்லை" - அமைச்சர் மெய்யநாதன் உறுதி
பதிவு : ஜூன் 10, 2021, 02:12 PM
சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எந்த திட்டத்திற்கும் தமிழகத்தில் அனுமதி கிடையாது என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்து உள்ளார்.
சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எந்த திட்டத்திற்கும் தமிழகத்தில் அனுமதி கிடையாது என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்து உள்ளார். புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் விழாவில் பங்கேற்ற அவர், ஆயிரத்திற்கு மேற்பட்ட மரக்கன்றுகளை மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் வழங்கினார். பின்னர் செய்தியார்களை சந்தித்த‌ அமைச்சர், சுற்றுச்சூழலை பாதிக்கும் எந்த திட்டமும் தமிழகத்தில் செயல்படுத்தப்படாது என்றும், நியூட்ரினோ திட்டம் குறித்து முதல்வர் விரைவில் நல்ல முடிவு எடுப்பார் எனவும் தெரிவித்தார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.