நடமாடும் அவசர சிகிச்சை பிரிவு - 7 ஆக்சிஜன் படுக்கைகளுடன் ஏற்பாடு - அமைச்சர் சேகர்பாபு திறந்து வைப்பு
பதிவு : ஜூன் 09, 2021, 04:01 PM
சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில், நடமாடும் அவசர சிகிச்சை பிரிவினை இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் தயாநிதி மாறன் எம்.பி. ஆகியோர் திறந்து வைத்தனர்.
சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில், நடமாடும் அவசர சிகிச்சை பிரிவினை இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் தயாநிதி மாறன் எம்.பி. ஆகியோர் திறந்து வைத்தனர். கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள், காத்திருப்பதை தவிர்க்கும் வகையில், ராஜஸ்தான் காஸ்மோ கிளப் என்ற தனியார் அமைப்பின் சார்பில், 7 ஆக்சிஜன் படுக்கைகளுடன் கூடிய, நடமாடும் அவசர சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. படுக்கை வசதி கிடைக்காமல் நோயாளிகள் காத்திருக்கும் நிலைக்கு தீர்வு காணவே, இதனை ஏற்பாடு செய்ததாக தனியார் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.