புதுச்சேரி அரசியலில் நீடிக்கும் குழப்பம்: 3 அமைச்சர்களை கோரும் பாஜக - கோரிக்கையை மறுக்கும் என்.ஆர்.காங்.?
பதிவு : மே 30, 2021, 09:24 AM
புதுச்சேரி அமைச்சரவை பதவியேற்பதில் இழுபறி நீடிக்கும் நிலையில், பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை, புதுச்சேரி பாஜக சட்டமன்றக் குழுத் தலைவர் நமச்சிவாயம் சந்தித்துப் பேசினார்.
புதுச்சேரி  சட்டமன்றத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ்-பாஜக கூட்டணி, வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. தொடர்ந்து, கடந்த 7-ம் தேதி முதலமைச்சராக ரங்கசாமி பதவியேற்றுக் கொண்டார். இதனையடுத்து, துணை முதல்வர் மற்றும் 3 அமைச்சர் பதவிகளை ஒதுக்குமாறு என்.ஆர். காங்கிரசிடம் பாஜக வலியுறுத்தியது. இதனை என்.ஆர். காங்கிரஸ் மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால், அமைச்சரவை பதவியேற்பதில் இழுபறி ஏற்பட்டது. இந்நிலையில், டெல்லி சென்ற, புதுச்சேரி பாஜக சட்டமன்றக் குழுத் தலைவர் நமச்சிவாயம், பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை சந்தித்தார். அப்போது, அமைச்சரவை விவகாரம் தொடர்பாக அவர் ஜே.பி. நட்டாவுடன் பேசி உள்ளார். மேலும், என்.ஆர். காங்கிரஸிடம் 3 அமைச்சர் பதவிகளை வழங்க வலியுறுத்துமாறு ஜே.பி. நட்டாவிடம் அவர் கேட்டுக் கொண்டு உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1786 views

"ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்க கூடாது" - டாஸ்மாக் வழிகாட்டு நெறிமுறைகள்

தமிழகத்தில் 27 மாவட்டங்களில், நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில், கடைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன..

43 views

கொடைக்கானலில் ரூ.100ஐ தாண்டிய பெட்ரோல் விலை

தமிழகத்தில் முதன்முறையாக கொடைக்கானலில் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

19 views

பிற செய்திகள்

130 அடி கிணற்றில் விழுந்த சிறுவன் - சிறுவனை மீட்க 8 மணி நேர போராட்டம்

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில், ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை 8 மணி நேரத்தில் தமிழக ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் மீட்டுள்ளார்.

11 views

கொரோனா தடுப்பூசி செலுத்தியதில் டாப் 10 நாடுகள்

கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் உலகில் முதல் பத்து இடங்களில் உள்ள நாடுகளை பற்றி ஒரு செய்தி தொகுப்பு..

495 views

அயோத்தி கோவிலுக்கு நிலம் வாங்கியதில் ஊழல்?

அயோத்தியில் ராமர் கோவில் அறக்கட்டளை 2 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை 18 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு வாங்கியிருப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களையும், அறக்கட்டளை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள விளக்கத்தையும் பார்க்கலாம்...

61 views

சிபிஎஸ்இ +2 மதிப்பெண் அளவீடு எப்படி?

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து, இன்னும் ஓரிரு தினங்களில் நிபுணர் குழு அறிக்கை அளிக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

62 views

உர்ஸ் திருவிழா - இந்து, முஸ்லீம் இணைந்து கொண்டாட்டம்

ஆண்டுதோறும் கொண்டாடப்படும் உர்ஸ் திருவிழா, கொரோனா இடைவெளிக்கிடையே, காஷ்மீரில் கொண்டாடப்பட்டது.

14 views

அயோத்தியில் நிலம் வாங்கியதில் ஊழல்? - ராமர் கோவில் அறக்கட்டளை விளக்கம்

அயோத்தியில் ராமர் கோவிலை கட்டும் அறக்கட்டளை 2 கோடி ரூபாய் மதிப்புடைய நிலத்தை 18 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ளது எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.