காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் யார்?- தேர்தல் தேதி மீண்டும் ஒத்தி வைப்பு

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் யார் என்பது குறித்து டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் யார்?- தேர்தல் தேதி மீண்டும் ஒத்தி வைப்பு
x
காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் யார் என்பது குறித்து டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அடுத்த தலைவர் தேர்ந்தெடுப்பது தொடர்பாக உட்கட்சி தேர்தல் ஜூன் 23 ஆம் தேதி நடைபெறும் என கட்சியின் பொதுச் செயலாளர் வேணுகோபால் தெரிவித்தார். சோனியா காந்தியும் தேர்தல் நடந்தே தீர வேண்டும் என வலியுறுத்தினார்.
மூத்த தலைவர்கள் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 
கொரோனா சூழ்நிலையில் தற்போது தேர்தல் தேவையில்லை என வலியுறுத்தினர். மேலும்
சிலர், ராகுல்காந்தியே அடுத்த தலைவராக இருக்க வேண்டுமென முன்மொழிந்ததாக, தகவல்கள் வெளியாகியுள்ளது. இறுதியாக பெரும்பாலான மூத்த தலைவர்கள் கொரோனா சூழ்நிலை சரியான பிறகு தேர்தல் வைத்துக் கொள்ளலாம் என கருத்து தெரிவித்ததன் அடிப்படையில் மீண்டும் தேர்தல் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்