திமுக கடந்து வந்த பாதை - நீண்ட போராட்ட வரலாறு கொண்ட திமுக

நீண்ட நெடிய போராட்ட வரலாறு கொண்ட இந்தியாவின் முக்கிய கட்சியாக விளங்கும் திமுக கடந்த வந்த பாதையை தற்போது பார்க்கலாம்...
திமுக கடந்து வந்த பாதை - நீண்ட போராட்ட வரலாறு கொண்ட திமுக
x
1949 செப்டம்பர் 17ஆம் தேதி, சென்னை ராயபுரம் ராபின்சன் பூங்காவில், அறிஞர் அண்ணா தலைமையில் திமுக உருவாக்கப்பட்டது.1952-ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் திமுக போட்டியிடவில்லை. 1953 ஜூலை 14, 15இல் அன்றைய முதலமைச்சர் ராஜாஜி கொண்டு வந்த குலக் கல்வித் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், "டால்மியாபுரம்" பெயரை "கல்லக்குடி" என பெயர் மாற்றக்கோரியும், தமிழக மக்களை 'நான்சென்ஸ்' என நேரு கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கருப்புக் கொடி போராட்டங்களை முன்னெடுத்தது தி.மு.க.1957 பொதுத் தேர்தலில் போட்டியிட்ட தி.மு.க, 15 சட்டமன்ற தொகுதிகளிலும், 2 நாடாளுமன்ற இடங்களிலும் வெற்றி பெற்றது. 1958 மார்ச் 2-இல் தி.மு.க. மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டு,  தேர்தல் சின்னமாக "உதயசூரியன்" ஒதுக்கப்பட்டது. 1959-இல் நடைபெற்ற சென்னை மாநகராட்சித் தேர்தலில் 90 இடங்களில் வென்ற தி.மு.க. முதன்முறையாக மாநகராட்சி மேயர் பொறுப்பேற்றது. 1962-ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில், 
ராஜாஜியின் சுதந்திரா கட்சி, முஸ்லீம் லீக் ஆகியவற்றுடன் இணைந்து போட்டியிட்ட தி.மு.க. 50 இடங்களில் வெற்றி பெற்றது. 1965 ஜனவரி 26 முதல் இந்தி கட்டாயமாக்கப்படுவதை எதிர்த்து குடியரசு தினத்தை துக்க நாளாக அறிவித்து திமுக போராட்டத்தில் குதித்தது.1967இல் நடைபெற்ற மூன்றாவது தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தலில் தி.மு.க., 138 இடங்களை வென்று முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது.1967 மார்ச் 6-ல் திமுகவின் பொதுச்செயலாளர் அண்ணா, தமிழ்நாட்டின் முதலமைச்சரானார்.1969 பிப்ரவரி 3ஆம் தேதி அண்ணா மறைந்த பின்னர், கருணாநிதி தமிழக முதல்வரானார். 1971-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 203 இடங்களில் போட்டியிட்ட தி.மு.க, 184 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது.1975 ஜன் 25இல், இந்திரா காந்தி அரசால் அவசரநிலை அறிவிக்கப்பட்டதையடுத்து, 1976 ஜனவரி 31இல் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது.1977 ஜூலை 4இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில், தி.மு.க. 230 இடங்களில் போட்டியிட்டு 48 இடங்களில் வென்று எதிர்க்கட்சியாக அமர்ந்தது. அப்போது, எம்.ஜி.ஆர் தலைமையில் அதிமுக ஆட்சியை கைபற்றியது. 1989 வரை, தொடர்ந்து 13 ஆண்டு காலம் அ.தி.மு.க. ஆளுங்கட்சியாகவும், தி.மு.க. எதிர்க்கட்சியாகவும் செயல்பட்டன. 
1980-இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட திமுக,  நாடாளுமன்றத் தேர்தலில் 16 இடங்களில் போட்டியிட்டு,  16 இடங்களிலும் வெற்றி பெற்றது.சட்டப் பேரவையில் 114 இடங்களில் போட்டியிட்டு 38 இடங்களில் வென்றது.1984இல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. 24 இடங்களை மட்டும் கைப்பற்றி எதிர்க்கட்சியாக இருந்தது. இந்தியைத் திணிக்கும் அரசியல் சட்ட நகலை எரித்ததற்காக 1986 டிசம்பர் 9இல் தி.மு.க. தலைவர்  கருணாநிதி உள்ளிட்ட 10 தி.மு.க. எம்எல்ஏக்கள்,பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.1987 டிசம்பர் 24இல், எம்.ஜி.ஆர் மறைந்ததையடுத்து, 1989 ஜனவரியில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க 203 இடங்களில் போட்டியிட்டு 151 இடங்களை வென்று, மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. 1991 ஜனவரி 30இல் விடுதலை புலிகளை ஆதரித்ததாக கூறி, மத்திய அரசு திமுக ஆட்சியை கலைத்தது. ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட பின், 1991-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில், 174 இடங்களில் போட்டியிட்ட தி.மு.க. 2 இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியை பிடித்தது.1996 இல் நடைபெற்ற தேர்தலில் 166 இடங்களில் வெற்றி பெற்ற தி.மு.க. மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. கருணாநிதி நான்காவது முறையாக முதல்வரானார். 2001 சட்டமன்ற தேர்தலில் 37 இடங்களில் மட்டும் வென்ற திமுக, எதிர்கட்சியாக அமர்ந்தது. ஜெயலலிதா தலைமையிலான அதிமுக மீண்டும் ஆட்சியை பிடித்தது.
2006 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 163 இடங்களில் வென்றது. 96 இடங்களில் வென்ற திமுக, கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு அட்சியமைத்தது. கருணாநிதி ஐந்தாவது முறையாக முதல்வரானார்.2011 சட்டமன்ற தேர்தலில் 23 இடங்களை மட்டுமே திமுக வென்ற நிலையில், எதிர்கட்சி அந்தஸ்தை கூட பெறவில்லை.2016 சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி அமைத்து திமுக தேர்தலை சந்தித்தது. அதில், 89 தொகுதிகளில் வெற்றிபெற்று பிரதான எதிர்கட்சியானது, திமுக...திராவிட இயக்கத்தின் விழுதான திமுக, தமிழர்களின் முக்கிய பிரச்சனைகளை முதன்மையாக கொண்டு, இன்றளவும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்