வாக்கு எண்ணிக்கை நடவடிக்கைகள் - வழிமுறைகளை பின்பற்ற கட்சிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை
பதிவு : ஏப்ரல் 30, 2021, 03:12 PM
தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கைக்காக தேர்தல் ஆணையம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து திருப்தி தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், அவற்றை பின்பற்ற அரசியல் கட்சிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
வாக்கு எண்ணிக்கை நடவடிக்கைகள் - வழிமுறைகளை பின்பற்ற கட்சிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை 

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கைக்காக தேர்தல் ஆணையம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து திருப்தி தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், அவற்றை பின்பற்ற அரசியல் கட்சிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.தடுப்பூசி, ரெம்டெசிவர், ஆக்சிஜன் பற்றாக்குறைகள் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.இதேபோல், கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்ற உத்தரவிடக் கோரி அமைச்சர் விஜயபாஸ்கர் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வு, கொரோனா பரவலுக்கு காரணம் தேர்தல் ஆணையம் தான் என கருத்து தெரிவித்திருந்தது.இந்நிலையில், இந்த வழக்குகள் மீண்டும் தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.அப்போது, விசாரணையின் போது நீதிபதிகள் தெரிவிக்கும் கருத்துக்களை வெளியிட ஊடகங்களுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும்,அதன் அடிப்படையில் தேர்தல் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய தடை விதிக்க வேண்டும் எனவும் கோரி, தேர்தல் ஆணையம் மனுத்தாக்கல் செய்தது.தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கைக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசு சார்பில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.இது குறித்து திருப்தி தெரிவித்த நீதிபதிகள், மாநில அரசும், தேர்தல் ஆணையமும் பிறப்பித்துள்ள இந்த விதிகளை அரசியல் கட்சியினர், ஊடகத்தினர் கண்டிப்புடன் பின்பற்றி, ஒத்துழைப்பு வழங்க அறிவுறித்தினர்.தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்திய நீதிபதிகள்,அரசின் விதிமுறைகளை அதிகாரிகளும், காவல் துறையினரும் கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு, வழக்குகளின் விசாரணையை மே 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

பிற செய்திகள்

கோயில் நிலம் அபகரிக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் மீது புகார்... வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடி

சிவகங்கையில் கோயில் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதாக எழுந்த புகாரையடுத்து கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டதோடு நிலத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

10 views

சோனியா - ராகுல் - ஸ்டாலின் சந்திப்பு... அரசியல் முக்கியத்துவம் பெற காரணம் என்ன ?

தனது இரண்டு நாள் பயணத்தை முடித்து கொண்டு முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லியில் இருந்து சென்னை திரும்பியுள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடனான முதலமைச்சரின் சந்திப்பு அரசியல் கவனம் பெற்றுள்ளது..

38 views

ஜூன் 21-ல் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் - முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது

தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வரும் 21 ஆம் தேதி, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

34 views

"தலைவராக தமிழர் பொறுப்பேற்பது மகிழ்ச்சி" - ஸ்டாலின்

அமெரிக்க இலினொய் தொழில்நுட்ப பல்கலைக்கழக தலைவராக தமிழர் ராஜகோபால் ஈச்சம்பாடி பொறுப்பேற்பது பெருமைக்குரியது என, முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

36 views

ஊரடங்கில் மேலும் பல தளர்வுகள்? நாளை முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை

தமிழகத்தில் நிலவும் ஊரடங்கில் மேலும் பல தளர்வுகள் அளிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலேசானை நடத்துகிறார்.

80 views

நடிகை சாந்தினியை ஏமாற்றியதாக வழக்கு... மணிகண்டனை தேடும் 2 தனிப்படை

முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பிடிக்கும் பணியில் இரண்டு தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

33 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.