கேரளா மாநிலம் நிலம்பூர் காங்கிரஸ் வேட்பாளர் வி.வி.பிரகாஷ் காலமானார்.

கேரளா மாநிலம் நிலம்பூர் காங்கிரஸ் வேட்பாளர் வி.வி.பிரகாஷ் மாரடைப்பால் இன்று காலமானார்.
கேரளா மாநிலம் நிலம்பூர் காங்கிரஸ் வேட்பாளர் வி.வி.பிரகாஷ் காலமானார்.
x
கேரளா மாநிலம் நிலம்பூர் காங்கிரஸ் வேட்பாளர் வி.வி.பிரகாஷ் மாரடைப்பால் இன்று காலமானார். 

கேரள மாநில காங்கிரஸ் மூத்த தலைவரும்,  நிலம்பூர் காங்கிரஸ் வேட்பாளருமான வி.வி.பிரகாஷ், இன்று காலை மாரடைப்பால் காலமானார். சில மாதங்களுக்கு முன் ஆஞ்சியோ செய்திருந்த நிலையில், உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். அங்கு, உடல்நிலை மோசமடைந்த நிலையில் காலை 5 மணியளவில் உயிரிழந்தார். பிரகாஷ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள ராகுல்காந்தி, காங்கிரசின் நேர்மையான மற்றும் கடின உழைப்பாளி என்று சுட்டிக்காட்டி உள்ளார்.  திருவனந்தபுரம் எம்.பி. சசி தரூர், முதல்வர் பினராயி விஜயன், எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா, ஐ.யூ.எம்.எல் தலைவர் பி.கே.குன்ஹாலிக்குட்டி உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இன்று பிற்பகல் இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது. 
 

Next Story

மேலும் செய்திகள்