"ஒரே கட்டமாக 3 கட்ட தேர்தல்" - தேர்தல் ஆணையத்துக்கு மம்தா கட்சி கோரிக்கை

மேற்கு வங்கத்தில் இறுதி 3 கட்ட தேர்தல்களை ஒரே கட்டமாக விரைவில் நடத்தக் கோரி இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது.
ஒரே கட்டமாக 3 கட்ட தேர்தல் - தேர்தல் ஆணையத்துக்கு மம்தா கட்சி கோரிக்கை
x
மேற்கு வங்கத்தில் இறுதி 3 கட்ட தேர்தல்களை ஒரே கட்டமாக விரைவில் நடத்தக் கோரி இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது.

தமிழகம், கேரளம், புதுச்சேரி, அசாம் மாநிலங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தலை அறிவித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையம், மேற்குவங்க மாநிலத்தில் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக 8 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என அறிவித்தது. ஏற்கனவே 5 கட்ட தேர்தல்கள் நடைபெற்று முடிந்து விட்ட நிலையில் இன்னும் 3 கட்ட தேர்தல்கள் நடத்த வேண்டி உள்ளது. வரும் 22, 26, 29 ஆகிய தேதிகளில் 3 கட்ட தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில், இவற்றை ஒன்றாக இணைத்து வாக்குபதிவு நடத்த வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆணையத்திற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. மேற்குவங்கத்தில் கொரோனா பரவல் மோசமான நிலைக்கு செல்லாமல் தடுக்க, இந்த கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என கடிதத்தில் வலியுறுத்தப்பட்டு உள்ளது. ரகுல்காந்தி, மம்தா பானர்ஜி ஆகியோர் கொரோனா பரவல் மிக வேகமாக பரவி வருவதால் தங்களது தேர்தல் பரப்புரைகளை ரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.ஆனால் மத்தியில் ஆளும் கட்சியான பா.ஜ.க. உள்ளிட்ட பிற கட்சிகள் தொடர்ந்து தேர்தல் பரப்புரைகளில் ஈடுபடுவதால் அதிக அளவில் மக்கள் கூட்டம் கூடுவதாகவும், இதனை தடுக்க தேர்தல்களை உடனடியாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்