பெரியார் சாலை பெயர் மாற்ற விவகாரம் - திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்
பதிவு : ஏப்ரல் 13, 2021, 05:33 PM
சென்னை பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை பெயரை கிராண்ட் வெஸ்டர் ட்ரங்க் ரோடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கு, திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை பெயரை கிராண்ட் வெஸ்டர் ட்ரங்க் ரோடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கு, திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அவரது முகநூல் பதிவில், 1979ல் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரால் இந்த சாலைக்கு சூட்டப்பட்ட பெயர், தற்போது மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனை கண்டிப்பதாக தெரிவித்துள்ள ஸ்டாலின், மீண்டும் பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலை என உடனடியாக மாற்றம் செய்திட வலியுறுத்துவதாகவும், தாமதம் செய்தால், மே 2-க்குப் பிறகு அதிகாரபூர்வ ஆணை வெளியாகும் நிலை ஏற்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

"பெரியார் பெயரை நீக்குவதா?": "பெயர் மாற்றத்தை உடனே நீக்க வேண்டும்" - வைகோ கடும் கண்டனம்

சென்னையில் பெரியார் ஈ.வெ.ரா. சாலை பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கு, மதிமுக பொது செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எம்.ஜி.ஆர் பெயரை சொல்லிக்கொண்டு ஆட்சி நடத்தும் எடப்பாடி பழனிசாமி, அவரால் பூந்தமல்லி சாலைக்கு சூட்டப்பட்ட பெயரை மாற்றி இருப்பதாக விமர்சித்துள்ளார். மேலும், சென்னை விமான நிலையத்தில் இருந்து காமராசர் மற்றும் அண்ணாவின் பெயரை நீக்கியதை எடப்பாடி அரசு கண்டு கொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ள அவர், பெரியார் சாலையின் பெயர் மாற்றத்தை உடனே நீக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6574 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1187 views

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

256 views

ஊரடங்கில் ஆன்லைன் விற்பனை அதிகரிப்பு - அமேசான் நிறுவனத்தின் நிகர லாபம் 3 மடங்கு அதிகரிப்பு

கொரோனா ஊரடங்கில் ஆன்லைன் விற்பனைகள் அதிகரித்துள்ளதால், அமேசான் நிறுவனத்தின் நிகர லாபம் 2021ன் முதல் காலாண்டில், 3 மடங்காக அதிகரித்துள்ளது.

69 views

பிற செய்திகள்

கீழமை நீதிமன்றங்களின் பணிகளை மறு உத்தரவு வரும் வரை நிறுத்துங்கள் - உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களின் பணிகளை மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நிறுத்தி வைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

62 views

பாரத் பயோடெக் தொழிற்சாலையில் கொரோனா தடுப்பூசி தயாரிக்க கோரி முத்தரசன் கோரிக்கை

கொரோனா தடுப்பு பணியில் முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்பாக செயல்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

48 views

மாயமான நாகை மீனவர்களை மீட்க வேண்டும் - தமிழக அரசுக்கு சீமான் வலியுறுத்தல்

மாயமான நாகை மீனவர்களை மீட்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார்.

40 views

தமிழகத்தில் 14 லட்சம் தடுப்பூசி இருப்பு - மத்திய அரசு தகவல்

தமிழகத்திற்கு வழங்கப்பட்ட 86 லட்சம் தடுப்பூசிகளில் தற்போது 14 லட்சம் தடுப்பூசிகள் இருப்பு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

33 views

முதல்வர் ஸ்டாலினுடன் நடிகர் ரஜினி சந்திப்பு; கொரோனா தடுப்பு பணிக்கு ரூ.50 லட்சம் நிதி

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

69 views

புதிய கல்வி கொள்கை தொடர்பான ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்தது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம்

புதிய கல்வி கொள்கை தொடர்பான ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்தது தமிழக அரசு. இந்த புறக்கணிப்பு குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம்.

319 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.