கேரளாவில் 74.02% வாக்குப்பதிவு; 2016-தேர்தலை விட 3% குறைவு

கேரளாவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், 74.02 சதவீத வாக்குகள் பதிவாகின.
கேரளாவில் 74.02% வாக்குப்பதிவு; 2016-தேர்தலை விட 3% குறைவு
x
கேரளாவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், 74.02 சதவீத வாக்குகள் பதிவாகின. 

அங்கு செவ்வாய்க்கிழமை காலை தொடங்கிய வாக்குப்பதிவு, இரவு 7 மணியளவில் நிறைவுற்றது. 

அங்கு மொத்தம் 74.02 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக கேரளாமாநில தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். 

இது கடந்த 2016-ல் நடைபெற்ற தேர்தலை விட 
மூன்று சதவீதம் குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சபாக கோழிக்கோடு மாவட்டத்தில் 78.31 சதவீதம் வாக்குகள் பதிவானது. குறைந்தபட்சமாக  பத்தனம்திட்டா மாவட்டத்தில் 67.16 சதவீதம் பதிவானது.

திருவனந்தபுரத்தில் 70.01சதவீதம், கொல்லம் 73.07சதவீதம்,  கோட்டயத்தில், 72.13 சதவீதம்  வாக்குகள் பதிவாகி உள்ளன.

இதேபோல்,  இடுக்கியில் 70.38,எர்ணாகுளத்தில், 74.14 சதவீதம், வயநாடு - 74.68, கண்ணூரில் 77.77 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருப்பதாக கேரளா மாநில தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்