தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021... வாக்களித்த அரசியல் தலைவர்கள்
பதிவு : ஏப்ரல் 06, 2021, 10:41 PM
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021... வாக்களித்த அரசியல் தலைவர்கள்
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021... வாக்களித்த அரசியல் தலைவர்கள் 
 

தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தனது சொந்த ஊரில் வாக்களித்தார். தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரையில் உள்ள செவன்த்டே  நர்சரி பள்ளியில், ஓ.பன்னீர்செல்வம் தனது வாக்கினை பதிவு செய்தார். அவருடன் அவரது மகனும் எம்.பியுமான ரவீந்திரநாத் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களும் வாக்களித்தனர்.


பாமக நிறுவனர் ராமதாஸ் திண்டிவனத்தில் தனது வாக்கை பதிவு செய்தார். அங்குள்ள மரகதாம்பிகை ஆரம்பப்பள்ளியில் அமைத்துள்ள 104 வது வாக்குச்சாவடியில் தனது மனைவி சரஸ்வதி அம்மாள் மற்றும் குடும்பத்தினருடனும் அவர் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். 


விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ஓட்டு போட்டு தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். அரியலூர் மாவட்டம் குன்னம் தொகுதிக்கு உட்பட்ட அங்கனூர் வாக்குச்சாவடிக்கு வந்த அவர், மக்களோடு மக்களாக வரிசையில் நின்றிருந்தார். பின்னர், வாக்காளர் பட்டியலில் விவரம் சரிபார்த்த பிறகு, தனது வாக்கை திருமாவளவன் பதிவு செய்தார். 


தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கீழ்பாக்கம் பகுதியில் தனது வாக்கை பதிவு செய்தார். அங்குள்ள மாநகராட்சி உள்விளையாட்டு அரங்கில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் அவர் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் சிதம்பரத்தில் வாக்களித்தார். தனது இல்லம் அருகே உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடியில், தனது மனைவியுடன் வந்து பாலகிருஷ்ணன் வாக்களித்தார்.


இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தனது வாக்கினைப் பதிவு செய்தார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே வேளூர் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் முத்தரசன் வாக்களித்தார். முன்னதாக வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால், சிறிது நேரம் காத்திருந்து அவர் தனது, ஜனநாயக கடமையை ஆற்றினார். 


சென்னை மந்தைவெளியில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்ற ஆயிரம் விளக்கு தொகுதி பாஜக வேட்பாளர் குஷ்பு, ஓட்டு போடும் உரிமையை நிறைவேற்றினார். பின்னர் தனது தொகுதிக்கு உட்பட்ட நுங்கம்பாக்கம் வாக்குச்சாவடியில் குஷ்பு ஆய்வு மேற்கொண்டார். 
 

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6594 views

கேரளாவில் 7 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று; மியூகோர்மைகோசிஸ் எனப்படும் பூஞ்சை தொற்று

கேரளாவில் ஏழு பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

2665 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1199 views

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

266 views

ஊரடங்கில் ஆன்லைன் விற்பனை அதிகரிப்பு - அமேசான் நிறுவனத்தின் நிகர லாபம் 3 மடங்கு அதிகரிப்பு

கொரோனா ஊரடங்கில் ஆன்லைன் விற்பனைகள் அதிகரித்துள்ளதால், அமேசான் நிறுவனத்தின் நிகர லாபம் 2021ன் முதல் காலாண்டில், 3 மடங்காக அதிகரித்துள்ளது.

76 views

(01/04/2021 ) வணக்கம் வாக்காளர்களே..!

(01/04/2021 ) வணக்கம் வாக்காளர்களே..!

61 views

பிற செய்திகள்

அதிமுக சார்பில் ரூ.1 கோடி நிவாரண நிதி; எம்பி, எம்எல்ஏக்கள் ஒரு மாத ஊதியம் நிதியுதவி

கொரோனா தடுப்பு பணிகளுக்காக அதிமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

36 views

கொரோனா தடுப்பு நடவடிக்கை - அனைத்துக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கொண்ட குழு அமைப்பு

கொரோனா தொற்றை பரவலாக கட்டுப்படுத்த, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், 13 கட்சி எம்.எல்.ஏ.க்கள் கொண்ட ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது.

50 views

கொரோனா தடுப்பு நடவடிக்கை - அனைத்துக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கொண்ட குழு அமைப்பு

கொரோனா தொற்றை பரவலாக கட்டுப்படுத்த, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், 13 கட்சி எம்.எல்.ஏ.க்கள் கொண்ட ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது.

31 views

நாட்டுக்கு முறையான கொரோனா தடுப்பூசி செயல்திட்டம் தேவை... பா.ஜ.க. அரசு மீது ராகுல்காந்தி சாடல்

நாட்டுக்கு முறையான கொரோனா தடுப்பூசி செயல்திட்டம் தேவை என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

33 views

மே 28 ஜி.எஸ்.டி கவுன்சில் - உறுப்பினராகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்?

ஜி.எஸ்.டி. கவுன்சிலில் தமிழக அரசு சார்பில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பிரதிநிதியாக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

53 views

நிவாரண நிதி - உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண நிதி விநியோகத்தை சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தொடக்கிவைத்தார்.

174 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.