அப்பவே அப்படி...குடவோலை முதல் மின்னணு இயந்திரம் வரை
பதிவு : மார்ச் 21, 2021, 08:49 AM
தமிழக தேர்தல் வரலாற்றில் குடவோலை முறை துவங்கி, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் வரையிலான வளர்ச்சி பற்றிய ஒரு தொகுப்பை இன்றைய அப்பவே அப்படி தொகுப்பில் பார்க்கலாம்.
தமிழக தேர்தல் வரலாற்றில் குடவோலை முறை துவங்கி, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் வரையிலான வளர்ச்சி பற்றிய ஒரு தொகுப்பை இன்றைய அப்பவே அப்படி தொகுப்பில் பார்க்கலாம்.

தமிழக தேர்தல் வரலாற்றை திரும்பிப் பார்த்தால், மன்னராட்சி காலங்களில் ஊராட்சி பிரதிநிதிகளை தேர்வு செய்ததில் இருந்து துவங்குகிறது. கி.பி.8ஆம் நூற்றாண்டில் மாறன் சடையப்ப மன்னன் ஆட்சியின்போது, நெல்லையை அடுத்த மானூர் பகுதியில் ஊராட்சி பிரதிநிதிகளை குடவோலை மூலம் தேர்வு செய்திருக்கின்றனர். 

கி.பி.9ம் நூற்றாண்டில் பராந்தக சோழன் ஆட்சியிலும் குடவோலை முறை தொடர்ந்ததாக, சென்னையை அடுத்த உத்திரமேரூரில் உள்ள கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. 

சரி... குடவோலை முறை என்றால் என்ன?

போட்டியிட விரும்பும் அனைவரின் பெயர்களையும் தனித்தனியாக ஓலைச் சீட்டுகளில் எழுதி குடத்துக்குள் போட்டு, அதை 5 வயது கூட நிரம்பாத சிறுவன் மூலமாக எடுப்பதே குடவோலை முறை. எத்தனை உறுப்பினர்கள் தேவையோ அத்தனை சீட்டுகள் எடுக்கப்படும். இந்த தேர்தலில் 35 முதல் 70 வயது வரையிலான ஆண்கள் மட்டுமே போட்டியிட முடியும். கடனாளிகள், குற்றவாளிகள் போன்ற சிலருக்கு நிச்சயமாக போட்டியிட அனுமதி கிடையாது. கி.பி.16ம் நூற்றாண்டு வரை இந்த முறையில் தான் பிரதிநிதிகள் தேர்வாகினர்.  

இந்தியா குடியரசானதும் நடந்த முதல் தேர்தலில் வாக்குச்சீட்டு முறை இருந்தது. ஆனால், சின்னங்கள் கிடையாது. ஒவ்வொரு வேட்பாளருக்கும் வெவ்வேறு வண்ணத்தில் பெட்டிகள் ஒதுக்கப்பட்டன. வாக்காளர்கள், தங்களுக்கு பிடித்த வேட்பாளருக்கான வண்ணப் பெட்டிக்குள், வாக்குச் சீட்டை போட வேண்டும். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் ஏராளமான பெட்டிகள் வைக்கப்பட்டன. இந்த நடைமுறையால் தான், முதலாவது மக்களவை தேர்தல் பல மாதங்கள் நீடித்தது. 1952ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தலும் கூட 9 கட்டங்களாக நடந்தது. 

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

542 views

குடும்பத் தகராறில் புதுப்பெண் மாயம் - கணவர் குடும்பத்தினருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

76 views

பிற செய்திகள்

டாஸ்மாக் கடைகளுக்கு எதிர்ப்பு - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

டாஸ்மாக் கடைகளுக்கு எதிர்ப்பு - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

51 views

மெரினாவில் 900 தள்ளு வண்டி கடைகள்.. மாற்றுதிறனாளிகளுக்கு 5% ஒதுக்க கோரி மனு

மெரினாவில் 900 தள்ளு வண்டி கடைகள்.. மாற்றுதிறனாளிகளுக்கு 5% ஒதுக்க கோரி மனு

16 views

அண்ணா பல்கலை தேர்வு முடிவுகளில் குளறுபடி - மறு ஆய்வு செய்ய வைகோ வலியுறுத்தல்

அண்ணா பல்கலை தேர்வு முடிவுகளில் குளறுபடி - மறு ஆய்வு செய்ய வைகோ வலியுறுத்தல்

12 views

கடந்த 2 நாட்களில் இரண்டு லட்சத்தி 91 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது - சுகாதாரத்துறை

தமிழகத்தில் கடந்த 2 நாட்களில் இரண்டு லட்சத்தி 91 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

8 views

திமுக எம்எல்ஏ தங்கும் விடுதியில் டிவி, மிக்ஸி, சிலிண்டர் திருட்டு

திமுக எம்எல்ஏ தங்கும் விடுதியில் டிவி, மிக்ஸி, சிலிண்டர் திருட்டு

9 views

வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பு? - சத்யபிரதா சாகுவிடம் திமுகவினர் புகார்

தமிழகம் முழுவதும் உள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் கூடுதல் பாதுகாப்பை உறுதி செய்யகோரி, தமிழக தேர்தல் ஆணையத்தில் திமுகவினர் புகார் அளித்தனர்.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.