களைகட்டும் மேற்கு வங்க தேர்தல் - நட்சத்திர தொகுதியான நந்திகிராம் தொகுதி

மேற்குவங்கத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் அவரது கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த சுவேந்து அதிகாரியும், ஒரே தொகுதியில் களம் காண்பதால், அம்மாநில தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.
களைகட்டும் மேற்கு வங்க தேர்தல் - நட்சத்திர தொகுதியான நந்திகிராம் தொகுதி
x
மேற்குவங்கத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் அவரது  கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த சுவேந்து அதிகாரியும், ஒரே தொகுதியில் களம் காண்பதால், அம்மாநில தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

மேற்குவங்க மாநிலத்தில் நந்திகிராம் சட்டப்பேரவைத் தொகுதி, அரசியலின் மையப்புள்ளியாக பார்க்கப்படுகிறது. இதே தொகுதியில் இருந்து தான் மம்தா பானர்ஜி தனது அரசியல் வாழ்க்கையை துவங்கினார்.
கடந்த 2007 ம் ஆண்டு நந்திகிராம் பகுதியில் அரசு திட்டத்திற்காக அப்போதைய இடதுசாரி அரசு, விவசாயிகள் நிலத்தை கையகப்படுத்த முயன்றதற்கு எதிராக பெரும் போராட்டம் நடைபெற்றது. இடதுசாரி அரசின் நிலம் கையகப்படுத்தும் முடிவுக்கு எதிராக திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் சார்பாக மம்தா பானர்ஜி பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தினார். இந்த சம்பவத்திற்கு பிறகுதான் மேற்கு வங்கத்தில் 34 ஆண்டுகள் கொடிகட்டிப் பறந்த கம்யூனிஸ்ட் ஆட்சி வீழ்த்தப்பட்டு 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற மம்தா பானர்ஜி முதன் முறையாக முதல்வராக பொறுப்பேற்றார்.

Next Story

மேலும் செய்திகள்