பாஜக - அதிமுக - பாமக கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் - அமித்ஷா

தமிழகத்தில் அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க. கூட்டணி ஆட்சி அமையும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பாஜக - அதிமுக - பாமக கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் - அமித்ஷா
x
தமிழகத்தில் அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க. கூட்டணி ஆட்சி அமையும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சட்டப் பேரவை தேர்தலுடன், கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத் தேர்தலும் வரும் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், கன்னியாகுமரி மக்களவை தொகுதியில், அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க. கூட்டணி சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பா.ஜ.க. வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளார். இந்நிலையில் இன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்துள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சுசீந்திரம் தாணுமாமலயான் சுவாமி  கோவிலில் சாமி தரிசனம் செய்த அமித்ஷா, அதனைத் தொடர்ந்து  வீடு வீடாக சென்று ஆதரவு திரட்டினார். அப்போது பிரதமர் மோடி ஆட்சியின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை அவர் விநியோகித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமித்ஷா, பொன் ராதாகிருஷ்ணனை வெற்றி பெறச் செய்து, டெல்லிக்கு அனுப்பி வைக்க வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுப்பதாக கூறினார்.  மேலும் வரும் சட்டப் பேரவை தேர்தலுக்கு பின்னர் தமிழகத்தில் அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க. கூட்டணி ஆட்சி அமைக்கும் என அமித்ஷா நம்பிக்கை தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்