என்.ஆர்.காங்கிரசின் முடிவு என்ன?

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் முடிவுக்காக அரசியல் கட்சிகள் அனைத்தும் காத்திருக்கின்றன.
என்.ஆர்.காங்கிரசின் முடிவு என்ன?
x
திமுக சார்பில் என்.ஆர்.காங்கிரசுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாஜகவோ, என்.ஆர்.காங்கிரஸ் தங்கள் கூட்டணியில் தான் இருப்பதாக கூறி வருகிறது. ஆனால், என்.ஆர்.காங்கிரஸ் பாஜக உடன் கூட்டணி என்பதை உறுதி செய்யவில்லை. இந்த சூழலில், என்.ஆர்.காங்கிரசுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்க விருப்பம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் நிறுவனர் ரங்கசாமியை நேரில் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் நேரில் சந்தித்தனர். இந்த நிலையில், ரங்கசாமி தொடர்ந்து மவுனம் சாதித்து வருவதால், என்.ஆர். காங்கிரஸ் யாருடன் கூட்டணி என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்