கேரள சட்டப்பேரவை தேர்தல் - ராகுல் வியூகம் என்ன?
பதிவு : மார்ச் 03, 2021, 08:12 AM
கேரளாவிற்கு ராகுல் காந்தி அதி முக்கியத்துவம் கொடுக்கும் நிலையில், அங்கு காங்கிரசின் வியூகம் மற்றும் சவால்களை என்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம்...
140 உறுப்பினர்களை கொண்ட கேரள சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. கேரளாவில், தூதரகம் மூலம் தங்கம் கடத்தப்பட்ட விவகாரம் மலைப்பாம்பாக, முதல்வர் பினராயி விஜயன் அரசை சுற்றியிருந்தாலும், இடதுசாரிகளின் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணியே மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என கருத்துக்கணிப்புகள் வெளியாகியிருக்கிறது. கேரளாவில் அதுமட்டும் நடந்தால் காங்கிரஸுக்கு மீள முடியாத பெரும் பின்னடைவு ஏற்படும் என கூறப்படுகிறது. மறுபுறம், பாஜகவும், கேரளாவில் தன்னுடைய அரசியல் தளத்தை வலுவாக்கிவிடும். இந்த தான் நிலையில்  தான், ராகுல் காந்தியே நேரடியாக கேரள தேர்தல் பிரசாரத்தில், களமிறங்கி இருக்கிறார். மற்ற சில மாநிலங்களை போல் கேரளாவிலும், காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி மோதல் நிலவுகிறது. உம்மன் சாண்டி, ரமேஷ் சென்னிதாலா மற்றும் கே.சி. வேணுகோபால் ஆதரவாளர்கள் என ஏகப்பட்ட கோஷ்டிகள் இருக்கிறது. 2019 நாடாளுமன்ற தேர்தல் வடமாநிலங்களில் காங்கிரஸ் படுதோல்வியை தழுவியபோதும், கேரளாவில் 20-ல் 19 இடங்களை கைப்பற்றியது. 

கேரளாவின் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட்டது, அக்கட்சி தொண்டர்களை மகிழ்ச்சியடைய செய்ததுடன், அவர்களை வெகுவாக ஊக்கப்படுத்தியது. இதுபோல் தற்போதைய தேர்தலிலும் ராகுலின் வருகை பிரதிபலிக்கும் என காங்கிரஸ் உறுதியாக நம்புகிறது. வட மாநிலங்களில் தேர்தல் பிரசாரங்களில் சுணக்கம் காட்டிய ராகுல் காந்தி, தற்போது கேரளாவில் சுறுசுறுப்பாக செயல்படுகிறார். மக்களை நேரடியாக சந்திக்க இடையூறாக இருந்த அரசியல் மற்றும் பாதுகாப்பு மட்டத்திலான தடைகளை எல்லாம் தகர்த்து மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களையும் நேரடியாக அணுகும் முறையை கையில் எடுத்து உள்ளார்., ராகுல்....

கொல்லத்தில் மீனவர்களுடன் கலந்துரையாடிய ராகுல் காந்தி, கடலில் மீன்பிடிக்கச் சென்றதும், நீந்தியதும் நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்தது. ராகுல் காந்தியின் இந்த அணுகுமுறை, கட்சியின் அடிமட்ட தொண்டர்களுக்கு பெரும் உற்சாகத்தினை கொடுத்துள்ளது. மேலும் தேசியவாதம், பப்பு என்ற பிரசாரம் பயனளிக்காத கேரளாவில், ராகுல் காந்தியும் உற்சாகமாக பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். தூதரகம் வாயிலாக தங்கம் கடத்தப்பட்ட விவகாரம், அமெரிக்க நிறுவனத்துடனான ஆழ்கடல் மீன்பிடி ஒப்பந்தம் உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து அவர் பிரசாரம் செய்கிறார். இது ஒருபுறம் இருக்க கூட்டணியை பொருத்தவரை,  இஸ்லாமியர்களின் வாக்குகளை கவரும் விதமாக இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், காங்கிரசுடன் கூட்டணியில் தொடர்கிறது. ஆனால் மத்திய கேரளாவில் கிறிஸ்தவர்களின் வாக்குகளை காங்கிரஸ் கூட்டணிக்கு பெற்றுக் கொடுத்த கேரள காங்கிரஸ் (எம்), இடதுசாரிகள் கூட்டணியில் இணைந்திருப்பது காங்கிரசுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இருப்பினும் அனைத்து தரப்பு வாக்குகளையும் கவரும் விதமாக ராகுல் காந்தியின் மதவழிப்பாட்டு தல பயணங்கள் அமைந்திருக்கிறது. கேரளாவை பொறுத்தவரையில் உள்ளூர் பிரச்சினைகளை மையப்படுத்தியே காங்கிரஸ், இடதுசாரிகள் கூட்டணிக்கு மக்கள் வாய்ப்பளிக்கிறார்கள். இருப்பினும் வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர் காலங்களிலும், கொரோனா தொற்று காலக்கட்டத்திலும் பினராயி விஜயன் அரசின் செயல்பாடு பாராட்டப்பட்டது. கடந்த டிசம்பர் உள்ளாட்சி தேர்தலில் செல்வாக்கு நிறைந்த பகுதியிலும், காங்கிரஸ் அதிர்ச்சிகரமான தோல்வியை தழுவியது. இதனால் இடதுசாரிகளை வெல்வது ராகுலுக்கு சவாலான ஒன்றாகவே இருக்கும் என்பது அரசியல் நோக்கர்களின் பார்வையாக உள்ளது. இந்நிலையில் உள்கட்சி மோதல், வேட்பாளர் தேர்வு என பல நெருக்கடிகளுக்கு மத்தியில் மக்களின் செல்வாக்கை பெற்று காங்கிரசை ராகுல் காந்தி அரியணை ஏறச் செய்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்...

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

4853 views

நாளை தேர்தலில் வாக்களிப்பது எப்படி? - விழிப்புணர்வு வீடியோ வெளியீடு

தமிழகத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்களிப்பது எப்படி ? என்பது குறித்த விழிப்புணர்வு வீடியோவை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

463 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

248 views

பிற செய்திகள்

துப்பாக்கிச் சூடு சம்பவம் - பிரதமர் கண்டனம்

மேற்குவங்கம் துப்பாக்கிச் ​சூடு சம்பவத்திற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவத்துள்ளார்.

11 views

வாக்குச்சாவடியில் மோதல்... துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழப்பு

மேற்கு வங்கத்தில் வாக்குச்சாவடியில் சிஐஎஸ்எப் படை நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

31 views

பாஜக எம்.பி.யின் கார் மீது தாக்குதல்.. லாக்கெட் சாட்டர்ஜிக்கு மக்கள் எதிர்ப்பு

மேற்கு வங்கம் மாநிலம் ஹூக்ளியில் பாஜக எம்பி லாக்கெட் சாட்டர்ஜியின் கார் மீது பொதுமக்கள் சரமாரி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

19 views

பீகார் போலீஸ் அதிகாரி அடித்துக் கொலை... விசாரணைக்கு சென்ற போது பயங்கரம்

இருசக்கர வாகன திருட்டு தொடர்பாக விசாரிக்க சென்ற பீகார் போலீஸ் அதிகாரி மேற்கு வங்கத்தில் அடித்துக் கொலை செய்யப்பட்டு உள்ளார்.

15 views

குடியரசு தலைவர், பிரதமர் புகைப்படங்கள் - நீதிமன்றம் உத்தரவு

தமிழக அரசு அலுவலகங்களில் குடியரசு தலைவர், பிரதமர் புகைப்படங்கள் வைப்பது குறித்து, சம்பந்தப்பட்ட அரசு அலுவலகங்கள் தான் முடிவெடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

11 views

இங்கிலாந்து இளவரசர் பிலிப் மறைவு - பிரதமர் மோடி இரங்கல்

இங்கிலாந்து இளவரசர் பிலிப் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார்

32 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.