அப்பவே அப்படி..! எதிர்பாராமல் கிடைத்த முதல்வர் பதவி
பதிவு : பிப்ரவரி 20, 2021, 12:55 PM
தமிழக முதல்வராக இருந்த சிலருக்கு யாருமே எதிர்பாராத விதமாக அந்த பதவி வந்து சேர்ந்தது. அவர்கள் யார்..?
அதிர்ஷ்டம் ஒருமுறைதான் கதவை தட்டும். அதை தக்க வைப்பதுதான் சாமர்த்தியம். புத்திசாலித்தனம். திறமை. என்றெல்லாம் சொல்வார்கள். 2016ம் ஆண்டு ஜெயலலிதா மறைந்த பிறகு யாருமே எதிர்பாராத விதமாக முதலமைச்சர் பதவியில் எடப்பாடி பழனிசாமி அமர்ந்ததை தமிழக மக்கள் அறிவார்கள். இதைத்தான் பிரசாரங்களில் விமர்சனமாகவே பேசி வருகிறார், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின். ஆனால், எதிர்பாராமல் முதல்வராக அமர்வது, தமிழகத்துக்கு புதிதல்ல. சுதந்திரம் பெற்றதும் நடைபெற்ற முதல் தேர்தலின் முடிவிலேயே எதிர்பாராத முதல்வர்தான் பதவிக்கு வந்தார். அந்த தேர்தலில் இடதுசாரிகள் உட்பட எதிர்க்கட்சிகள் அதிக இடங்களில் வென்ற நிலையில், இடதுசாரி முதல்வர் தான் பதவியேற்பார் என மக்கள் நினைத்தபோது மத்திய காங்கிரஸ்  அரசின் ஆதரவோடு சென்னை மாகாணமாக இருந்த தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைந்தது. யாருமே எதிர்பாராத விதமாக  முதல்வரானார் ராஜாஜி. அப்போது அவர் எம்எல்ஏ கூட கிடையாது. அன்றைய சட்ட மேலவையில ஆளுநரின் நியமன எம்எல்சியாகி அதன் மூலம் முதல்வரானார்.

குலக்கல்வி போன்ற திட்டங்களால் அவரது இரண்டாண்டு ஆட்சி கடும் விமர்சனத்துக்குள்ளானதால் 1954ல் எதிர்பாராத விதமாக முதல்வரானார் காமராஜர். அப்போது காமராஜர் எம்எல்ஏவோ, எம்எல்சியோ கிடையாது. நாடாளுமன்ற மக்களவை எம்பியாக இருந்தார். முதல்வர் ஆவதற்காக, எம்பி பதவியை ராஜினாமா செய்து விட்டு வந்த அவர், அதன்பிறகு, குடியாத்தம் தொகுதியின் இடைத்தேர்தலில் வென்று எம்எல்ஏ ஆனார். 1963ல் காமராஜர் பதவி விலகியதும் பக்தவத்சலம் முதல்வரானதும் எதிர்பாராததுதான். 1967 தேர்தலில் திமுக ஆட்சியை கைப்பற்றியபோது  அண்ணா முதல்வராவார் என்பது அனைவரும் எதிர்பார்த்தது. ஆனால் அந்த தேர்தலில், அவர் எம்எல்ஏவுக்கு போட்டியிடவில்லை. நாடாளுமன்ற தேர்தலும் சேர்ந்து நடைபெற்றதால் தென் சென்னை மக்களவை தொகுதியில் போட்டியிட்டு எம்பியாக வென்றிருந்தார், அண்ணா. திமுக அதிக இடங்களில் வென்றதும் எம்பி பதவியை நிராகரித்து விட்டு முதல்வரானார். அண்ணா மறைந்ததும் இடைக்கால முதல்வராக நெடுஞ்செழியன் இருந்தார். அப்போது, திமுகவில் மூத்த தலைவர்கள் பலர் இருந்தபோதும், யாருமே எதிர்பாராமல் 45 வயதே ஆன கருணாநிதி முதல்வரானதும் ஆச்சரியமே.

இதுபோல 1987ம் ஆண்டு எம்ஜிஆர் மறைந்ததும் அவரது மனைவி ஜானகி அம்மாள், முதல்வரானதும், தமிழக மக்கள் எதிர்பாராததுதான். 23 நாட்கள் மட்டுமே பதவியில் இருந்த ஜானகி அம்மாள் தான், தமிழக வரலாற்றிலேயே எம்எல்ஏவாக இல்லாமலேயே முதல்வராக இருந்தவர். 2001 தேர்தலில் அதிமுக வென்று ஜெயலலிதா முதல்வரான நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பால் அவர் பதவி விலகியபோது, முதல்முறை எம்எல்ஏவாக பேரவையில் இருந்த  ஓ.பன்னீர் செல்வத்துக்கு முதல்வர் பதவி தேடி வந்ததை யாருமே எதிர்பார்க்கவில்லை. இவர்கள் எல்லோரையும் விட ஒருவர் மிக மிக அதிர்ஷ்டசாலி. அவர் யார் தெரியுமா? சுதந்திரத்துக்கு முன், 1937ம் ஆண்டு சென்னை மாகாணத்தின் முதல்வரான  வெங்கட ரெட்டி. அந்த தேர்தலில் 100க்கும் அதிகமான இடங்களை வென்ற காங்கிரஸ் கட்சி, ஆட்சியமைக்க மறுத்ததால் 21 இடங்களுடன் இரண்டாவது இடத்தில் இருந்த  நீதிக் கட்சிக்கு ஜாக்பாட் அடித்து, முதல்வரானார், அந்த கட்சியின் வெங்கட ரெட்டி. தமிழக தேர்தல் வரலாற்றில் இது போன்ற சுவாரஸ்யங்கள் இன்னும் ஏராளமாக இருக்கின்றன. அவற்றை ஒவ்வொன்றாக அடுத்தடுத்த அ்பபவே அப்படி தொகுப்பில் பார்ப்போம்..

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

518 views

குடும்பத் தகராறில் புதுப்பெண் மாயம் - கணவர் குடும்பத்தினருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

49 views

பிற செய்திகள்

பெற்ற மகன்களை நரபலி கொடுக்க முயன்ற தாய் - தாயின் தன்பாலின ஈர்ப்பால் விபரீதம்

ஈரோடு அருகே பெற்ற மகன்களையே, தாய் நரபலி கொடுக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

108 views

அம்பேத்கரின் 130-வது பிறந்த நாள் - ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை

சட்டமேதை அம்பேத்கரின் 130 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

14 views

ஆட்டோ: கார் நேருக்கு நேர் மோதல் - சிறுவன் உட்பட இருவர் உயிரிழப்பு

தேனி மாவட்டம், போடி அருகே நிகழ்ந்த கொடூர விபத்தில் சிறுவன் உட்பட 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

21 views

புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா நியமனம்

புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

13 views

தமிழகத்தில் 6,984 பேருக்கு கொரோனா... அதிகபட்சமாக சென்னையில் 2,482 பேர் பாதிப்பு

தமிழகத்தில் 6,984 பேருக்கு கொரோனா... அதிகபட்சமாக சென்னையில் 2,482 பேர் பாதிப்பு

47 views

கொரோனா பரவல் அதிகரிப்பு : கொடிசியாவில் சிறப்பு சிகிச்சை மையங்கள் - பெண்களுக்கு 80 படுக்கை வசதியுடன் தனி வார்டு

கோவையில் இரண்டாம் கட்ட கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கூடுதலாக சிறப்பு சிகிச்சை மையங்களும் அமைக்கப்பட்டு உள்ளது.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.