தேர்தலுக்காக கொரோனா வழக்குகள் வாபஸ்... திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டல்

சட்டமன்ற தேர்தலை கணக்கில் கொண்டே கொரோனா பேரிடர் கால வழக்குகளை வாபஸ் பெறுவதாக முதலமைச்சர் அறிவித்து இருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
தேர்தலுக்காக கொரோனா வழக்குகள் வாபஸ்... திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டல்
x
சட்டமன்ற தேர்தலை கணக்கில் கொண்டே கொரோனா பேரிடர் கால வழக்குகளை வாபஸ் பெறுவதாக முதலமைச்சர் அறிவித்து இருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

அவர் வெளியிட்ட முகநூல் பதிவில்,

கொரோனா காலத்தில் பொதுமக்களை பாதுகாக்க வேண்டிய அரசு, அவர்களை பல வகைகளிலும் வதைத்ததாகவும்,வழக்கு போட்டு துன்புறுத்தியதை அப்போதே சுட்டிக்காட்டியிருந்தேன் எனவும் தெரிவித்துள்ளார்.இந்த வழக்குகளால் இளைஞர்களின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பயணம் உள்ளிட்ட வாழ்வாதார சிக்கல்கள் ஏற்பட்டதை தெரிவித்தும்,அதிமுக அரசு அலட்சியம் காட்டிய நிலையில் முதலமைச்சர் பழனிசாமி, தேர்தலுக்காக வழக்குகளை  வாபஸ் பெறுவதாக அறிவித்திருப்பதாக ஸ்டாலின் கூறியுள்ளார்.தி.மு.க.வின் கோரிக்கையை நிறைவேற்றியாக வேண்டிய கட்டாயத்திற்கு இந்த அரசு உள்ளது என்ற அவர், வெற்று அறிவிப்பாக இல்லாமல் அதனை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்