தி.மு.க விருப்ப மனு விநியோகம் துவக்கம் - ரூ.1000 செலுத்தி படிவம் பெறும் தி.மு.கவினர்

திமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்பமனு விநியோகம் தொடங்கியது.
x
சென்னையில் உள்ள தி.மு.கவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விருப்ப மனு விநியோகத்தை தொடங்கி வைத்தார்.  இன்று முதல் வருகிற 24ஆம் தேதி வரை விருப்ப மனு விண்ணப்பம் வழங்கப்பட உள்ளது. தி.மு.க சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் ஆயிரம் ரூபாய் செலுத்தி படிவத்தை பெற்றுச் செல்கிறார். தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை தொகுதி விண்ணப்பக் கட்டணமாக 25 ஆயிரம் ரூபாய்  செலுத்த வேண்டும், மகளிர் மற்றும் தனித்தொகுதிக்கு 15,000 ரூபாய் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். தோழமைக் கட்சிகளுக்கான தொகுதியில் போட்டியிட விண்ணப்பித்திருந்தால் கட்டணம் திருப்பித் தரப்படும் என தி.மு.க அறிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்