தமிழக அரசின் புதிய தொழில் கொள்கை : நாளை வெளியிடும் முதலமைச்சர் பழனிசாமி
பதிவு : பிப்ரவரி 15, 2021, 12:29 PM
தமிழக அரசின் புதிய தொழில் கொள்கையை, முதலமைச்சர் பழனிசாமி நாளை வெளியிடுகிறார்.
தமிழக அரசின்  புதிய தொழில் கொள்கையை,  முதலமைச்சர் பழனிசாமி நாளை வெளியிடுகிறார். அத்துடன், சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கான தொழில் கொள்கையும் வெளியிடப்படுகிறது. இவ்விரண்டு தொழில் கொள்கையும் நாளை காலை சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெறவுள்ள விழாவில் முதலமைச்சர் வெளியிடவுள்ளார்.  பின்னர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னிலையில் 28 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. இதன் மூலம்,  நேரடியாகவும் மறைமுகமாகவும் 2 லட்சத்து 25  ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது. ஏற்கனவே போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அடிப்படையில் 8 தொழில் நிறுவனங்கள் உற்பத்தியை முதலமைச்சர் நாளை  துவக்கி வைக்கிறார். இதனை தொடர்ந்து, 4 சிப்காட் மற்றும் 6 டிட்கோ தொழில் பேட்டைகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார். மணப்பாறை, ஒரகடம், கும்மிடிப்பூண்டி, தர்மபுரி, சிப்காட் தொழில் பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன. 


தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

344 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

81 views

பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஊக்குவிப்பு - ராஜ்நாத் சிங்

பாதுகாப்பு உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்க அரசு நடவடிக்கைகளை எடுப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

57 views

பிற செய்திகள்

பெட்ரோலில் 10% எத்தனால் விவகாரம் : பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் எச்சரிக்கை

பெட்ரோலில் 10 சதவிகிதம் எத்தனால் கலந்து வினியோகிக்கப்படும் நிலையில், வாடிக்கையாளர்களுக்கு, தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

9 views

ராமநாதசுவாமி கோயில் யானை ராமலட்சுமி - பீகாரில் இருந்தவள் ராமேஸ்வரம் வந்த கதை

மொழிகள் எப்போதும் உணர்வுகளுக்கு தடையில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் தேக்கம்பட்டி முகாமில் உற்சாக துள்ளல் போடும் ராமலட்சுமியை பற்றி இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

19 views

சீர்காழி இரட்டை கொலை கொள்ளை சம்பவம் : நேரில் ஆய்வு நடத்த உள்ள சிபிசிஐடி எஸ்பி

சீர்காழியில் என்கவுன்டரில் கொள்ளையன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி எஸ்பி ரவி இன்று ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

13 views

பனிப்பொழிவு, வரத்து குறைவால் வெங்காய விலை உயர்வு - வியாபாரிகள் தகவல்

சென்னை கோயம்பேடு சந்தையில், சின்ன வெங்காயத்தின் விலை, கிலோ, 120 ரூபாயாக உயர்ந்து இருப்பது மக்களை கவலை அடையச் செய்து உள்ளது

29 views

"கடைசி நாள் வரை துரோகமே செய்வது" - முதலமைச்சரின் நடவடிக்கைக்கு தி.மு.க. கண்டனம்

தனது பதவி காலத்தின் கடைசி நாள் வரை துரோகமே செய்வது என்று முடிவு செய்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செயல்படுவது கண்டனத்திற்குரியது என தி.மு.க. தெரிவித்துள்ளது.

18 views

"மக்களின் அடிப்படை தேவைகளை அறிந்தவர் முதல்வர்" - அமைச்சர் சி.வி.சண்முகம்

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மக்களின் அடிப்படை பிரச்சினைகளை உணர்ந்த முதல்வர் என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் புகழாரம் சூட்டியுள்ளார்.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.