சுற்றுசூழல் ஆர்வலர் திஷா ரவி கைது - காலிஸ்தான் அமைப்புடன் தொடர்பு உள்ளதா?

விவசாயிகள் போராட்டம் விவகாரத்தில் சர்ச்சைக்குரிய டூல்கிட் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சுற்றுசூழல் ஆர்வலர் திஷா ரவியை டெல்லி போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகிறது.
சுற்றுசூழல் ஆர்வலர் திஷா ரவி கைது - காலிஸ்தான் அமைப்புடன் தொடர்பு உள்ளதா?
x
விவசாயிகள் போராட்டம் விவகாரத்தில் சர்ச்சைக்குரிய டூல்கிட்  விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சுற்றுசூழல் ஆர்வலர் திஷா ரவியை டெல்லி போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகிறது. 

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு சுவீடன் நாட்டு சுற்றுசூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் டுவிட்டரில் ஆதரவு தெரிவித்திருந்தார். அப்போது அவர் வெளியிட்ட டுவிட்டில் சர்ச்சைக்குரிய டூல்கிட் ஒன்றை பகிர்ந்திருந்தார். இந்த டூல்கிட் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த டெல்லி சைபர் கிரைம் போலீசார், பெங்களூருவை சேர்ந்த திஷா ரவி என்ற சுற்றுசூழல் ஆர்வலரை கைது செய்தனர். அவரை டெல்லி அழைத்து சென்று நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது தேசத்துரோக பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது என்றும் திஷாவுக்கு காலிஸ்தான் அமைப்புடன் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து நீதிபதி நீதிபதி தேவ் சரோகா திஷாவை 5 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதித்தார். இதனையடுத்து திஷாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்