"சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக மாணவர்கள் குரல் கொடுக்க வேண்டும்" - திஷா கைதுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்

விவசாயிகள் போராட்ட ஆதரவு விவகாரத்தில் சர்ச்சைக்குரிய டூல்கிட் தொடர்பாக சுற்றுசூழல் ஆர்வலர் திஷா ரவியை கைது செய்ததற்கு எதிர்க்கட்சிகள், பிரபலங்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளனர்.
சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக மாணவர்கள் குரல் கொடுக்க வேண்டும்  - திஷா கைதுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்
x
விவசாயிகள் போராட்ட ஆதரவு விவகாரத்தில் சர்ச்சைக்குரிய டூல்கிட் தொடர்பாக சுற்றுசூழல் ஆர்வலர் திஷா ரவியை கைது செய்ததற்கு எதிர்க்கட்சிகள், பிரபலங்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளனர்.

திஷா ரவி கைது செய்யப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கும் காங்கிரஸ் எம்.பி. ப. சிதம்பரம், சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக அனைத்து மாணவர்களும், இளைஞர்களும் குரல் கொடுக்க வேண்டும் எனக் கூறியிருக்கிறார். மேலும், எல்லையில் சீனப்படைகள் ஊடுருவியதைவிடவும், விவசாயிகளின் எதிர்ப்பை ஆதரிக்கும் விதமான ஒரு டூல்கிட் மிகவும் ஆபத்தாவிட்டது என விமர்சனம் செய்திருக்கும் அவர், டெல்லி போலீஸ் ஒடுக்குமுறையாளர்களின் கருவியானது வருத்தம் அளிக்கிறது என காட்டமாக பதிவிட்டுள்ளார்.
 
மாணவி திஷா ரவி கைது செய்யப்பட்டது முற்றிலும் கொடுமையானது எனக் கூறியிருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்,  இது தேவையற்ற துன்புறுத்தல் மற்றும் அச்சுறுத்தல் என்றும் மாணவி திஷாவுக்கு தன்னுடைய முழு ஆதரவும் உள்ளது என்றும் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சீதாராம் யெச்சூரி, விவசாயிகளின் மகளை தேசத்துரோக வழக்கில் கைது செய்வதால் போராட்டத்தை பலவீனப்படுத்த முடியும் என மோடி அரசு நினைக்கிறது. ஆனால் இது இளைஞர்களை தட்டி எழுப்பும், ஜனநாயகத்திற்கான போராட்டத்தை வலுப்படுத்தும் எனக் டுவிட்டரில் கூறியுள்ளார்.

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸின் சகோதரி மகளான மீனா ஹாரிஸ் வெளியிட்டுள்ள டுவிட் செய்தியில், விவசாயிகளுக்கு ஆதரவான டூல்கிட் பகிர்ந்ததற்காக இந்திய அதிகாரிகள் மற்றொரு இளம் ஆர்வலரை கைது செய்து உள்ளனர் என்றும் இவ்வாறு அரசாங்கம் ஆர்வலர்களின் குரலை ஒடுக்குவது ஏன் என்ற கேள்வியை கேழுங்கள் என்றும் பதிவிட்டுள்ளார். திஷா ரவிக்கு நிபந்தனையற்ற ஆதரவை தெரிவித்து இருக்கும் நடிகர் சித்தார்த், இந்த அநீதியும் கடந்து போகும் எனக் டுவிட்டரில் கூறியிருக்கிறார். மேலும் டெல்லி போலீசை கடுமையா விமர்சனம் செய்துள்ளார். இதுபோன்று பல்வேறு தலைவர்கள் பிரபலங்கள் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து மாணவியை விடுதலை செய்ய வலியுறுத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்