அப்பவே அப்பிடி... நீண்ட காலம் ஒரே சின்னம் வைத்திருக்கும் கட்சி

இந்திய தேர்தல் வரலாற்றில் சின்னங்கள் அறிமுகமானது, 1957ல் நடந்த இரண்டாவது தேர்தலில் தான். அப்போது இந்தியா முழுவதும் மிக வலிமையாக இருந்த காங்கிரஸ் கட்சியின் சின்னம், இரட்டைக் காளை.
அப்பவே அப்பிடி... நீண்ட காலம் ஒரே சின்னம் வைத்திருக்கும் கட்சி
x
இந்திய தேர்தல் வரலாற்றில் சின்னங்கள் அறிமுகமானது, 1957ல் நடந்த இரண்டாவது தேர்தலில் தான். அப்போது இந்தியா முழுவதும் மிக வலிமையாக இருந்த காங்கிரஸ் கட்சியின் சின்னம், இரட்டைக் காளை.

நேரு மறைவுக்கு பின் மூத்த தலைவர்களுக்கும் இந்திரா காந்திக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட காங்கிரஸ் கட்சி இரண்டாக பிளவு பட்டு இரட்டைக் காளை சின்னம் காணாமல் போனது.இதையடுத்து, இந்திரா காந்தியின் காங்கிரஸ் கட்சிக்கு பசுவும் கன்றும் சின்னமும், காமராஜர் போன்ற மூத்த தலைவர்கள் ஆரம்பித்த ஸ்தாபன காங்கிரசுக்கு கைராட்டை சுற்றும் பெண் சின்னமும் கிடைத்தது.இந்த போட்டியில், இந்திரா காந்தியின் காங்கிரஸ் தான் நீடித்தது. இந்த கட்சிக்கும் கூட எமர்ஜென்சி காலத்துக்கு பிறகு,  புதிய சின்னத்தை தேர்வு செய்தார், இந்திராகாந்தி. இதுதான் இன்றளவும் காங்கிரசின் சின்னமாக நீடிக்கும் கை சின்னம்.பாஜகவின் ஆரம்ப கால தாய்க்கட்சியான அகில பாரத ஜனசங்கம் கட்சியின் சின்னம் பூஜை விளக்கு. 1980ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு, பாஜகவாக மாறிய பின் அந்த கட்சியின் சின்னம் தாமரையாக மாறியது.திமுகவில் இருந்து பிரிந்து, அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கட்சியை எம்ஜிஆர் ஆரம்பித்தபோது, அந்த கட்சியின் சின்னமாக இரட்டை இலையை அறிமுகம் செய்தார். ஆனால், 1987ம் ஆண்டு எம்ஜிஆர் மறைந்த போது அதிமுக கட்சி இரண்டாக பிளவுபட்டதால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டு சேவல், இரட்டை புறா என இரண்டு சின்னங்கள் ஒதுக்கப்பட்டன. இதுபோல, 2016ம் ஆண்டு ஜெயலலிதா மறைந்தபோதும் இரட்டை இலை சின்னம் மீண்டும் முடக்கப்பட்டு தொப்பி, இரட்டை தெரு விளக்கு என சின்னங்கள் ஒதுக்கப்பட்டன.பாமக ஆரம்பித்தபோது, அந்த கட்சியின் சின்னமாக இருந்தது,  யானை. அந்த சின்னத்திலேயே எம்பி, எம்எல்ஏக்கள் எல்லாம் தேர்வானார்கள் தெரியுமா? இப்போது அந்த கட்சியின் சின்னம் மாம்பழம். வைகோ ஆரம்பித்த மதிமுகவும் இப்படித்தான். ஆரம்பத்தில் அந்த கட்சியின் சின்னம், குடை. இப்போது அந்த கட்சியின் சின்னமாக பம்பரம் இருக்கிறது. கட்சியின் அங்கீகாரம் தொடர்பான பிரச்சினையில் இதுவும் மாறலாம்.தேர்தல் வெற்றிகளை ருசித்த பெரிய கட்சிகளின் சின்னங்களே அடிக்கடி மாறிய நிலையில், இந்திய அரசியல் வரலாற்றிலேயே மிக நீண்ட காலமாக ஒரே சின்னத்தை வைத்திருக்கும் கட்சி எது தெரியுமா? அந்த கட்சி திமுக தான். 1957ம் ஆண்டு பேரவை தேர்தலில் கருணாநிதி போட்டியிட்டது, உதயசூரியன் சின்னம்.நம்நாடு படத்தில் வாங்கையா வாத்தியாரய்யா பாடலில்....  சூரியன் உதிச்சாலே இங்கே காரிருள் மறையுதுங்க  வரிகள் மட்டும்)தொடர்ந்து சுமார் 65 ஆண்டுகளாக திமுகவின் சின்னமாக நீடிக்கிறது, உதய சூரியன்.அதற்கு அடுத்தபடியாக மிக நீண்ட கால சின்னங்கள் எவை தெரியுமா?  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கதிர் அரிவாள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னங்கள்... கட்சிகளின் சின்னங்களுக்குள் இது மாதிரி பெரிய பெரிய விஷயங்கள் எல்லாம் பொதிந்து கிடப்பது போலவே, சட்டப்பேரவை தேர்தல்  வரலாற்றில் மறைந்து கிடக்கும் ஏராளமான தகவல்களை இனிவரும் நாட்களில் பார்க்கலாம்.



Next Story

மேலும் செய்திகள்