அப்பவே அப்படி... சின்னங்கள் பற்றி சிறியதாக ஒரு வரலாறு
பதிவு : பிப்ரவரி 11, 2021, 02:24 PM
தேர்தல் நெருங்கும் நிலையில், தனி சின்னம், ஒரே சின்னம் என்பது போன்ற வார்த்தைகளை அடிக்கடி கேட்கலாம்.
தேர்தல் நெருங்கும் நிலையில், தனி சின்னம், ஒரே சின்னம் என்பது போன்ற வார்த்தைகளை அடிக்கடி கேட்கலாம். இந்த நிலையில், சின்னங்களை பற்றி சின்னதா ஒரு வரலாற்று பின்னணியை பார்க்கலாம்..


சுதந்திரம் பெற்றதும் நடந்த தேர்தல்களில் எல்லாம் சின்னங்கள் என்ற கான்செப்டே கிடையாது. வண்ணங்கள் மட்டும் தான். காங்கிரஸ் கட்சி என்றால் மஞ்சள் நிற பெட்டி. இதுபோல, ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு வண்ணத்தில் பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும். எந்த கட்சிக்கு வாக்களிக்க விருப்பமோ, அந்த கட்சிக்கான வண்ணப் பெட்டிகளுக்குள்  வாக்குச் சீட்டை போட வேண்டும்.

சுதந்திர இந்தியாவின் இரண்டாவது பொதுத்தேர்தலில் தான் சின்னங்களே அறிமுகமாகின. அந்த தேர்தலில் காங்கிரசின் சின்னம் இரட்டை காளை. ராஜாஜியின் சுதந்திரா கட்சிக்கு நட்சத்திரம். திமுகவுக்கு, அது முதலாவது தேர்தல் என்பதால் சுயேச்சையாக கருதி தனியாக சின்னம் ஒதுக்கவில்லை.

கருணாநிதிக்கு மட்டுமே உதய சூரியன் சின்னம் கிடைத்தது. அண்ணா, நெடுஞ்செழியன் போன்றவர்களுக்கு கிடைத்த சின்னம், சேவல். 1962 தேர்தலில்தான் திமுகவுக்கு நிரந்தர சின்னமாக உதய சூரியன் கிடத்தது.

1972ம் ஆண்டில் எம்ஜிஆர் ஆரம்பித்த அதிமுக, மறு ஆண்டிலேயே சந்தித்த தேர்தல்,   திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியின் இடைத்தேர்தல். அதில்,  இரட்டை இலை சின்னம் அமோக வெற்றியை பெற்றுத்தர, அதுவே, கட்சியின் நிரந்தர சின்னம் ஆனது.

எம்ஜிஆர் மறைந்ததும் அதிமுக பிளவு பட்டபோது, ஜெயலலிதா தலைமையிலான அணிக்கு சேவல் சின்னமும், ஜானகி அம்மாளின் அணிக்கு இரட்டை புறா சின்னமும் ஒதுக்கப்பட்டது. அங்கீகாரம் இல்லாவிட்டாலும் ஒரே சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது,  சின்னத்தை மக்களிடம் அறிமுகம் செய்வதற்காக உயிருள்ள விலங்கு, பறவைகளை எடுத்துச் செல்லும் போக்கு வேட்பாளர்கள் மத்தியில் அதிகரித்ததால் அவை தடை செய்யப்பட்டன. இப்போதெல்லாம் உயிரற்ற பொருட்கள் தான் அங்கீகரிக்கப்பட்ட தேர்தல் சினனங்களாக வைக்கப்பட்டுள்ளன.

இதுபோல, அன்றைய தேர்தல்களில் எல்லாம், கூட்டணி கட்சியை தங்கள் கட்சி சின்னத்திலேயே போட்டியிடுமாறு பெரிய கட்சிகள் நிர்பந்தம் செய்வது கிடையாது. 1980ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் என்ற கட்சியை குமரி அனந்தன் ஆரம்பித்திருந்தார். அவர், அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்த போதும் அவரது கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்டது ரோஜாப்பூ என்ற தனி சின்னத்தில் தான்.

1996ம் ஆண்டு தேர்தலுக்கு நாற்பதே நாட்களுக்கு முன் ஜி.கே.மூப்பனார்  ஆரம்பித்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் என்ற சின்னத்தை பிரத்யேகமாக ஒதுக்கியது, தேர்தல் ஆணையம். 

சமீப காலமாக, புதிய கட்சிகளுக்கென பிரத்யேக சின்னத்தை ஒதுக்கும் நடைமுறை குறைந்து வருகிறது. இதனால்தான் மக்கள் நீதி மய்யம் வரையிலான புதிய கட்சிகளும் சின்ன பிரச்சினையை நீதிமன்றம் வரை பெரிய பிரச்சினையாக எடுத்துச் செல்கின்றன.

தேர்தல் வரலாற்றை திரும்பிப் பார்த்தால், மக்களை பொறுத்தவரை சின்னம் என்பது பெரிய பிரச்சினை என்றே தெரிகிறது. 1980 தேர்தலில் குமரி அனந்தனின் ரோஜாப் பூ சின்னம் பல தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதுபோல, 1991ம் ஆண்டு ராஜீவ்காந்தி படுகொலையால்,  அனுதாப அலை வீசியபோதும் ஸ்ரீவில்லிபுத்தூரில் சிங்கம் சின்னத்தில் தாமரைக்கனி, அறந்தாங்கி தொகுதியில் குடை சின்னத்தில் திருநாவுக்கரசர், பண்ருட்டியில் யானை சின்னத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன் என வெற்றிக் கனியை பறித்தனர். 

2006 தேர்தலில் விருத்தாசலத்தில் முரசு சின்னத்தில் விஜயகாந்தும், 2017 ஆர்கே நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் டிடிவி தினகரனும் வென்றது அறிமுகமில்லா சின்னத்தில்தான். 1996ல் கட்சி ஆரம்பித்த நாற்பதே நாளில் தமாகா மிகப்பெரிய வெற்றியை பெற்றதும் புதியதான சைக்கிள் சின்னத்தில்தான். 

இப்படியாக தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாற்றில், சின்னங்கள் சொல்லும் பெரிய சுவாரஸ்யஙகள் இன்னும் ஏராளமான இருக்கின்றன.  அவற்றையும் பார்ப்போம்..

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

408 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

244 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

68 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

55 views

பிற செய்திகள்

தேர்தல் நடத்தை விதிகளை மீறினால் நடவடிக்கை"... மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரிக்கை

பொது இடங்களில் அரசியல் விளம்பரங்கள் செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரித்துள்ளார்.

24 views

ஆர்.எஸ். பாரதி மீதான வழக்கை ரத்து செய்ய மறுப்பு

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி மீதான வன்கொடுமை தடை சட்ட வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

21 views

சூரப்பாவுக்கு எதிரான விசாரணை ஆணையம்- உயர்நீதிமன்றத்தில் சூரப்பா சார்பில் வழக்கு

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவுக்கு எதிரான விசாரணை ஆணையத்தின் அறிக்கை மீது அரசு எந்த உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.

46 views

மெய்சிலிர்ப்பூட்டும் மெழுகு சிற்பங்கள் - மெழுகு சிற்பக் கலையில் கலக்கும் சிற்பி

காஞ்சிபுரம் அருகே இறந்தவர்களின் உருவங்களை தத்ரூப மெழுகு சிலையாக வடிவமைத்து ஒருவர் அசத்தி வருகிறார்

22 views

"ஐஜேகே பிரிந்தது கவலை இல்லை" - திமுக முதன்மை செயலர் நேரு விமர்சனம்

பழையன கழிதலும் புதியன புகுதலும் போல கூட்டணியில் இருந்து ஐஜேகே விலகியதால் தங்களுக்கு எந்த நஷ்டமும் இல்லை என திமுக முதன்மைச் செயலாளர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.

46 views

சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம்...

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை சூடுபிடித்துள்ளது...

273 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.