அப்பவே அப்படி...எம்.எல்.ஏ.வான முதல் நடிகர்
பதிவு : பிப்ரவரி 08, 2021, 12:26 PM
சட்டப்பேரவை கனவில் உலா வரும் திரையுலகினர் மத்தியில் முதன் முறையாக எம்எல்ஏ ஆன நடிகர் ஒருவரை பற்றிய செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்..
சட்டப்பேரவை கனவில் உலா வரும் திரையுலகினர் மத்தியில் முதன் முறையாக எம்எல்ஏ ஆன நடிகர் ஒருவரை பற்றிய செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்..

திரையுலகில் காலடி வைத்ததுமே அடுத்து சட்டசபை தான் என்ற கனவுடன் உலா வரும் நடிகர்களின் காலம் இது. 

ஆனால் சட்டப் பேரவைக்குள் நுழைவது அவ்வளவு எளிதல்ல. தமிழகத்தில் முதன் முறையாக சட்டப் பேரவைக்குள் நுழைந்த நடிகர் யார் தெரியுமா? அவர் தான் லட்சிய நடிகர் எஸ்எஸ்ஆர்.

எஸ்எஸ்ஆரின் தந்தை சூரிய நாராயண தேவரும் முத்து ராமலிங்க தேவரும் நண்பர்கள். அவருக்கு ராஜேந்திரன் என்ற பெயரை சூட்டியவரே தேவர் தான். அதாவது, பிறக்கும்போதே அரசியலுடன் பிறந்தவர் எஸ்எஸ்ஆர்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அறிமுகமான பராசக்தி தான் இவருக்கும் முதல் படம். திராவிட இயக்க கொள்கைகளில் மிக தீவிரமான ஈடுபாடு கொண்டவர் எஸ்எஸ்ஆர்.

திராவிட இயக்கத்தின் மீது கொண்ட கொள்கை காரணமாக புராண, இதிகாச படங்களில் நடிப்பதில்லை என உறுதியாக இருந்தவர், எஸ்எஸ்ஆர். அதனாலேயே 'லட்சிய நடிகர்' என்றே அழைக்கப்பட்டார், இந்த கணீர் குரலுக்கு சொந்தக்காரர்

பேரறிஞர் அண்ணா மீதான ஈர்ப்பால் திமுக பிரசார மேடைகளிலும் முழங்கியவர் எஸ்எஸ்ஆர். திமுகவை பொறுத்தவரை எம்ஜிஆருக்கெல்லாம் சீனியர் இவர்தான். 1957ம் ஆண்டில் முதன் முறையாக தேர்தல்களத்தில் திமுக புகுந்தபோது தேனி தொகுதியில் எஸ்எஸ்ஆர் களம் இறங்கினார். ஆனால் தோற்றுப் போனார்.

1957ம் ஆண்டு தேர்தலில் தோற்றாலும் அதே தேனி தொகுதியில் இருந்து 1962ம் ஆண்டு தேர்தலில் வென்று திமுக எம்எல்ஏவாக பேரவைக்குள் நுழைந்தார் எஸ்எஸ்ஆர். அவர்தான் தமிழக சட்டப்பேரவைக்குள் நுழைந்த முதல் நடிகர். 

அண்ணாவின் மிகத் தீவிரமான ஆதரவாளர். தன்னுடைய வீட்டு நிகழ்ச்சிகளை அண்ணா இல்லாமல் நடத்தியதே இல்லை. கிரக பிரவேசம் என்ற வார்த்தை கூட புதுமனை புகுவிழா என மாறியது எஸ்எஸ்ஆர் வீட்டு நிகழ்ச்சியில் தான். அப்படி அழகு தமிழில் மாற்றியவர், அண்ணா.

தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் பதவியிலும் இருந்திருக்கிறார் எஸ்எஸ்ஆர். அதிமுக ஆரம்பித்த பிறகு எம்ஜிஆருடன் சேர்ந்த எஸ்எஸ்ஆர், 1980ம் ஆண்டு பேரவை தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் இருந்து அதிமுக சார்பாக எம்எல்ஏ ஆனார். அந்த தேர்தலில் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளர் எஸ்எஸ்ராஜேந்திரன் தான். 

அதற்கு அடுத்த 1984ம் ஆண்டு தேர்தலில், அமெரிக்காவில் இருந்தபடியே எம்ஜிஆர் வென்றது, இதே ஆண்டிப்பட்டி தொகுதியில்தான்.

அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என திராவிட இயக்க முதல்வர்களுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்த எஸ்எஸ்ஆர். 2001 வரை ஐம்பது ஆண்டு காலம் நடிப்பையும் தொடர்ந்திருக்கிறார், முதல்வராகவும் நடித்திருக்கிறார்.

தமிழக சட்டப் பேரவையில் நுழைவதற்கு எஸ்எஸ்ஆர் போட்டு வைத்த பாதையில், பயணம் செய்த திரை பிரபலங்களை பற்றிய தகவல்களை இனி வரும் நாட்களில் பார்க்கலாம்.

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

424 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

74 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

64 views

பிற செய்திகள்

யார் யார் தபால் வாக்கு அளிக்கலாம்?

வாக்குப்பதிவு அன்று மேலும் பலருக்கு அத்தியாவசிய சேவையின் கீழ் தபால் வாக்களிக்க தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

57 views

வேட்பாளர் நேர்காணல் - தேமுதிக அறிவிப்பு

வரும் 6ஆம் முதல் முதல் 8 தேதி வரை 3 நாட்கள், விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தப்படுமென தேமுதிக தெரிவித்துள்ளது.

48 views

அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு - இன்று மீண்டும் பேச்சுவார்த்தை என தகவல்

அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு குறித்து இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

216 views

"30 குழுக்கள் அமைத்து தேர்தல் பணி" - நீலகிரி ஆட்சியர் செய்தியாளர் சந்திப்பு

நீலகிரி மாவட்டத்தில் 30 குழுக்கள் அமைத்து தேர்தல் கண்காணிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக, ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்

22 views

திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாள் - பெரியார் நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை

திமுக தலைவர் ஸ்டாலின், தனது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை வேப்பேரி, பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மலர்தூவியும், மலர் வளையம் வைத்தும் மரியாதை செலுத்தினார்.

37 views

டோல்கேட்டை தாக்கும் த.வா.க நிர்வாகிகள் - அடித்து நொறுக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பு

சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் உள்ள டோல்கேட்டை தமிழக வாழ்வுரிமை கட்சியினர் அடித்து நொறுக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

35 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.