அப்பவே...அப்படி... அமைச்சரான முதல் நடிகர்
பதிவு : பிப்ரவரி 07, 2021, 01:46 PM
சட்டப்பேரவைக்குள் நுழைவதற்கு நடிகர்கள் பலரும் விருப்பப்படும் நிலையில், முதன் முறையாக அமைச்சர் பதவியையே பெற்ற நடிகரைப் பெற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
சட்டப்பேரவைக்குள் நுழைவதற்கு நடிகர்கள் பலரும் விருப்பப்படும் நிலையில், முதன் முறையாக அமைச்சர் பதவியையே பெற்ற நடிகரைப் பெற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

அரசியலில் எம்எல்ஏ ஆவது பலருக்கு கனவாக இருந்தாலும் அமைச்சர் பதவி என்பது பெருங்கனவு. அரசியல்வாதிகளுக்கே கிடைக்காத அந்த வாய்ப்பு நடிகர்களுக்கு கிடைத்திருக்கிறது 

அப்படி தமிழகத்தில் முதன் முறையாக அமைச்சரான நடிகர் ஐசரி வேலன். 1970களில் வெளியான தமிழ் படங்களின் காமெடி நடிகர்

1970ல் 'எங்க மாமா' என்ற சிவாஜி படம் மூலம் அறிமுகமானாலும் எம்ஜிஆருடன் அதிக படங்களில் நடித்திருக்கிறார், ஐசரி வேலன். 
எம்ஜிஆர் அதிமுகவை ஆரம்பித்தபோது கட்சியில் இணைந்து எம்ஜிஆரின் தீவிர விசுவாசியாகவே மாறினார். இதனால், 1977ல் அதிமுக சந்தித்த முதல் பொதுத் தேர்தலிலேயே ஐசரிவேலனுக்கு போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது.

திமுக கோட்டையாக இருந்த சென்னை மாநகரில், அந்த தேர்தலில்தான் புதிதாக தோன்றிய ஆர்கே நகர் தொகுதியில் களமிறங்கினார் ஐசரி வேலன். புது தொகுதி, புது கட்சி, தேர்தலுக்கும் புதுசு... ஆனாலும் ஆர்கே நகரில் வென்றார், ஐசரி வேலன். தமிழக மக்களுக்கு நன்றாக அறிமுகமான ஆர்கே நகர் தொகுதியின் முதல் எம்எல்ஏ அவர்தான்

1977ம் ஆண்டு எம்ஜிஆர் தலைமையில் அமைந்த முதலாவது அமைச்சரவையில் துணை அமைச்சராக இடம் பிடித்து, தமிழகத்தில் அமைச்சரான முதல் நடிகர் என்ற பெயரையும் பெற்றார், ஐசரி வேலன். தற்போதைய பிரபல கல்வியாளரும் நடிகருமான ஐசரி கணேஷ், இவரது மகன்தான்

ஐசரி வேலனைப் போலவே அமைச்சரான மற்றொரு நடிகர், திருச்சி சவுந்தரராஜன். இவரும் எம்ஜிஆரின் முதலாவது அமைச்சரவையில் 1978ல் இடம் பிடித்தவர் தான்..

எம்ஜிஆர் ரசிகர் மன்றங்களின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருந்து அவருடைய படங்களிலேயே அவ்வப்போது தலை காட்டி நடிகரானவர் 
திருச்சி சவுந்தரராஜன்.  

அதிமுவை ஆரம்பித்ததும், ரசிகர் மன்ற பொறுப்பாளராக இருந்த திருச்சி சவுந்தரராஜனுக்கு, 1977ம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட சீட் கொடுத்தார், எம்ஜிஆர். 
அந்த தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் நின்று வென்றார், திருச்சி சவுந்தரராஜன். அதே தொகுதியில் 1980, 1984ம் ஆண்டு தேர்தல்களிலும் தொடர்ந்து வென்ற அவர், எம்ஜிஆர் அமைச்சரவையில் உணவு, சத்துணவு, நலவாழ்வு என பல துறைகளின் அமைச்சராக இருந்தவர். தமிழகத்தில் நீண்ட காலம் அமைச்சராக இருந்த நடிகர் இவர்தான்..

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

396 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

197 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

52 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

46 views

பிற செய்திகள்

பள்ளிக் கல்வித்துறை செயலாளர் ஆலோசனை - ஏப்.15க்குள் பாடங்களை முடிக்க அறிவுறுத்தல்

பொது தேர்வை சந்திக்க உள்ள மாணவர்களுக்கான பாட திட்டங்களை ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என, பள்ளிக் கல்வித்துறை செயலாளர், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

21 views

குட்கா சட்டசபைக்கு கொண்டு வந்த விவகாரம் - 2-வது உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து தீர்ப்பு

சட்டமன்றத்திற்குள் குட்கா கொண்டு வந்த விவகாரத்தில் திமுகவுக்கு எதிரான 2-வது உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து செய்யப்பட்டது.

14 views

"சசிகலா விடுத்த அழைப்பு அதிமுகவிற்கு பொருந்தாது" - அமைச்சர் ஜெயக்குமார்

சசிகலாவின் அழைப்பு அமமுகவிற்கு தான் பொருந்தும் என்றும், அதிமுகவிற்கு அது பொருந்தாது எனவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

53 views

ஜெயலலிதா நினைவிட அருங்காட்சியகம் - முதல்வர் திறந்து வைத்தார்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகம் மற்றும் அறிவு சார் பூங்காவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து பார்வையிட்டார்.

24 views

ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாள் - ஈபிஎஸ், ஓபிஎஸ் உள்ளிட்டோர் மரியாதை

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாள் விழாவையொட்டி, அவரது உருவ சிலைக்கு, முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

11 views

யானைகள் முகாமைக் கலக்கும் பாமா, காமாட்சி! - இணைபிரியா யானைத் தோழிகள்

42 ஆண்டுகளாக இணை பிரியாமல் வாழ்ந்து வரும் இரு யானைகள் குறித்து விளக்குகிறது சுவாரஸ்யமான இந்த செய்தித் தொகுப்பு...

34 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.