அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - இன்று மாலை நடைபெறும் என அறிவிப்பு

சென்னையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் அமைச்சர்களுடன் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் ஆலோசனை நடத்த உள்ளனர்.
x
சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தின் இன்று மாலை 5 மணிக்கு கூட்டம் நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. நாளை மறுநாள் சசிகலா தமிழகம் வர உள்ள நிலையில் அ.தி.மு.க. இன்று ஆலோசனை நடத்துவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்துவது தொடர்பாக இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் பேசப்படும் என கூறப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்