திமுக எம்பி வில்சன் விடுத்த கோரிக்கை - பதில் கடிதம் எழுதியுள்ள மத்திய சட்ட அமைச்சகம்

நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி காக்கப்படும் என திமுக எம்பி வில்சனுக்கு மத்திய சட்டத்துறை அமைச்சகம் பதில் கடிதம் எழுதியுள்ளது.
திமுக எம்பி வில்சன் விடுத்த கோரிக்கை - பதில் கடிதம் எழுதியுள்ள மத்திய சட்ட அமைச்சகம்
x
நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி காக்கப்படும் என திமுக எம்பி வில்சனுக்கு மத்திய சட்டத்துறை அமைச்சகம் பதில் கடிதம் எழுதியுள்ளது.இது தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு வில்சன் எழுதிய கடிதத்தில், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனங்களில் சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், பெண்கள் ஆகியோருக்கு முக்கியத்துவம் அளிக்காமல் இருப்பதாக கூறியிருந்தார். இது குறித்து மத்திய சட்டத்துறை அமைச்சகத்திற்கு அறிவுரை வழங்குமாறு கோரிக்கை வைத்திருந்தார். இதனிடையே வில்சனின் கோரிக்கைக்கு சட்டத்துறை அமைச்சகம் பதில் கடிதம் எழுதியுள்ளது. அதில் இந்திய அரசியலமைப்பை பொறுத்தவரை நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு முறை பின்பற்ற முடியாது என தெளிவுபடுத்தியுள்ளது. இருப்பினும் நீதிபதிகள் நியமனத்தில் பன்முகத்தன்மை பேணப்படும் என்று தெரிவித்துள்ளது.
நீதிபதிகள் நியமனம் தொடர்பான பரிந்துரைகளை அனுப்பும்போது சிறுபான்மையினர், பழங்குடியின பிரிவினர், பெண்கள் ஆகியோருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்