இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் பிப். 2ந் தேதி கூடுகிறது
பதிவு : ஜனவரி 22, 2021, 01:17 AM
தமிழக சட்டப் பேரவை கூட்டத்தொடர், ஆளுநர் உரையுடன் பிப்ரவரி 2ந் தேதி கூட உள்ளது.
இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் என்பதால், ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளது. சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக சட்டப்பேரவை கூட்டம் பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி, காலை 11 மணிக்கு,  சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் கூட உள்ளதாக தெரிவித்துள்ளார். முதலில் ஆளுநர் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்த , அவரை தொடர்ந்து சட்டப்பேரவை தலைவர் தனபால் ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை வாசிப்பார் என குறிப்பிட்டுள்ளார்.

பின்னர், கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவு செய்ய உள்ளது.  3 அல்லது 4 நாட்கள் இந்த கூட்டத்தொடர் நடைபெறும் என பேரவை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொதுத்தேர்தல் விரைவில் வரவுள்ள சூழலில், ஆளுநர் உரையில் பல்வேறு கவர்ச்சிகரமான புதிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  கொரோனா விவகாரம், வேளாண்மை சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப பிரதான எதிர்கட்சியான திமுக திட்டமிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

409 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

250 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

70 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

57 views

பிற செய்திகள்

காடையாம்பட்டி ஆட்டு சந்தை - திருவிழா என்பதால் விற்பனை அமோகம்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காடையாம்பட்டி ஆட்டு சந்தையில், நல்ல விலைக்கு ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

7 views

மக்கள் நீதி மய்யம் பிரசார திட்டங்களை வகுக்கும் WAR ROOM

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகம் சர்கார் திரைப்பட காட்சிகள் போல் பரபரப்பாக காணப்படுகிறது . அது குறித்து பார்ப்போம்.

260 views

ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் புகார் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம் - டிஜிபி திரிபாதி உத்தரவு

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

11 views

அப்பவே அப்படி... தமிழகத்தின் சுவாரஸ்ய முதல்வர்கள்

சட்டப் பேரவையை கடந்து நாடாளுமன்றத்திலும் தடம் பதித்த முதல்வர்கள், எம்எல்ஏ ஆகாமலேயே முதல்வர் பதவியை வகித்தவர்கள் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை இன்றைய அப்பவே அப்படி தொகுப்பில் பார்க்கலாம்.

80 views

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் - அரசு வாகனங்களை பயன்படுத்த தடை

சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது,.

8 views

வாங்கவும் ஆள் இல்லை, விற்கவும் வழி இல்லை - நலிவடைந்து வரும் கல்யாண பெட்டி தொழில்

வாங்கவும் ஆள் இல்லாமல், விற்கவும் வழி இல்லாமல் நலிவடைந்து வரும் கல்யாண பெட்டி தொழில் குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.