ஜோ பைடனின் மின்னல் வேக முதல் உத்தரவுகள்

டிரம்பின் பல்வேறு திட்ட அறிவிப்புகள் திரும்பப்பெறப்படும் என கூறி இருந்தார், அமெரிக்காவின் 46-வது அதிபர் ஜோ பைடன்.
ஜோ பைடனின் மின்னல் வேக முதல் உத்தரவுகள்
x
டிரம்பின் பல்வேறு திட்ட அறிவிப்புகள் திரும்பப்பெறப்படும் என கூறி இருந்தார், அமெரிக்காவின் 46-வது அதிபர் ஜோ பைடன். சொன்னது மட்டுமல்ல அதை செயலிலும் காட்டி இருக்கிறார் 

கொரோனா பரவலை தடுக்க அனைத்து தரப்பினரும் 100 நாள் கட்டாய முகக் கவசம் அணிதல் என்ற சவால் அறிவித்துள்ளார்

ஒபாமா அரசில் 2014ஆம் ஆண்டு எபோலா தொற்று பரவலை தடுக்க அமைத்த பயோ-டிஃபென்ஸ் என்ற குளோபல் சுகாதார உயிர் பாதுகாப்பு துறை அமைக்கப்படும் என்றார்.

கொரோனா பரிசோதனை, தடுப்பூசி, விநியோகம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை நேரடி தெரிவிக்க ரெஸ்பான்ஸ் கோ ஆர்டினேட்டரை நியமித்துள்ளார்.
 
டிரம்ப் அரசு வெளியேறிய உலக சுகாதார மையத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும் என்ற பைடன், அதற்கான அதிகாரி பதவி மீண்டும் நியமிக்கப்படும் என கூறியுள்ளார்.    

இதுவரை சுகாதார பாதுகாப்பை உறுதி செய்த பைடன், வீடு, விவசாயம் மீதான வங்கிக் கடன் மற்றும் அடமானங்களின் காலக்கெடு நாட்களை நீட்டித்துள்ளார். 

கல்விக் கடன் வழங்குவதை செப்டம்பர் 30ஆம் தேதி வரை தற்காலிமாக நிறுத்தி வைக்க முடிவெடுத்த பைடன், அதுகுறித்த குழு கூடி முடிவு செய்யும் என குறிப்பிட்டுள்ளார்.
  
டிரம்ப் வெளியேறிய பாரீஸ் காலநிலை மாற்ற குழுவில், அமெரிக்க மீண்டும் இணைய கையெழுத்திட்டுள்ள அதிபர் பைடன், முந்தைய ஒபாமா அரசின் முடிவு பின்பற்றப்படும் என கூறியுள்ளார். 

டிரம்பின் 100 தீங்கான வாக்குறுதிகள், ஒப்பந்தங்கள் திரும்பப்பெறப்படும் என கூறியுள்ள அதிபர் பைடன், நியூ இங்கிலாந்து பகுதியின் குழாய் பதிப்பு பணிகள் நிறுத்தம் விவகாரத்தில் 2016-இல் ஒபாமா அரசின் கொள்கையை பின்பற்ற உத்தரவிட்டுள்ளார். 

நிறம் மற்றும் சமூக பாகுபாடின்றி அனைத்து பகுதிக்கும் சமமான நிதி  வழங்க பைடன் உத்தரவிட்டுள்ளார்

டிரம்ப் அரசின் 1776 ஆணையங்களை நிறுத்தப்படும் என கூறியுள்ள பைடன், அமெரிக்க வரலாறு குறித்த கல்வி, சுதந்திரமான அணுகுமுறைகளை பேணப்படவும் அறிவுறுத்தி உள்ளார்.  

உரிய ஆவணமற்ற அமெரிக்கர்களை டிரம்ப் அரசு கணக்கில் கொள்ளவில்லை என்று கூறிய பைடன், டிரம்ப்-2020 கொள்கை திரும்பப்பெறப்படும் என்றார். 

பணியிடம், பொதுயிடங்களில், பாலியல் மற்றும் நிற வேறுபாடு மற்றும் ஓரின சேர்க்கையாளர்கள் மீதான தாக்குதல்களை தடுக்க துல்லிய கணக்கெடுப்பு ஏதுவாக இருக்கும் என்று பைடன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 


ஆவணமற்ற இளைஞர்களை நாடு கடத்துவதில் இருந்து பாதுகாத்த ஒபாமாவின் திட்டத்தை மீண்டும் அமலாக்க 'டீரீமெர்ஸ்' திட்டத்துக்கு பைடன் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

2017-ஆம் ஆண்டில் சிரியா, ஈரான், ஈராக், சூடான், லிபியா, சோமாலியா மற்றும் யேமன் நாட்டினர் அமெரிக்கா வரவும், குடியேறவும் தடை செய்த "முஸ்லீம் பயணத் தடை" என்பது நிறுத்தப்பட்டு, விசா விண்ணப்பங்களை வழங்க வெளியுறவுத் துறைக்கு அறிவுறுத்த்தியுள்ளார்.

எல்லையில் தடுப்புச் சுவர் கட்டுவதை நிறுத்த உத்தரவிட்டுள்ள அதிபர் பைடன், தேசிய அவசர கால அறிவிப்பை முடிவுக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளார். அமெரிக்காவில் வசிக்கும் லைபீரிய மக்கள் வெளியேற 2022 ஆம் ஆண்டு ஜூன் 30 வரை காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

டிரம்ப் அரசின் கடைசி நேர அனைத்து உத்தரவுகளையும் நிறுத்தி வைப்பதாக கூறியுள்ள பைடன், புதிய நிர்வாகம் மற்றும் நியமனத்தில் தனது தலையீடும், முடிவும் இருக்கும் என தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்