திமுக கூட்டணி ஒருமித்த எண்ணங்களின் அடிப்படையிலான கூட்டணி, கொள்கை சார்ந்த கூட்டணி - ஸ்டாலின்

திமுக கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுத்தும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
திமுக கூட்டணி ஒருமித்த எண்ணங்களின் அடிப்படையிலான கூட்டணி, கொள்கை சார்ந்த கூட்டணி - ஸ்டாலின்
x
திமுக கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுத்தும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், கூட்டணி பேச்சுவார்த்தையை பொறுத்தவரை உரிய நேரத்தில் தொடங்கும் என்றும், சுமூகமாக தொகுதி பங்கீடு நடக்கும் என்றும் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணி என்பது எண்ணிக்கை அடிப்படையில் அமைந்த கூட்டணி அல்ல, ஒருமித்த எண்ணங்களின் அடிப்படையிலான கூட்டணி, கொள்கை சார்ந்த கூட்டணி என்றும் குறிப்பிட்டுள்ளார். கடந்த மக்களவை தேர்தலில் திமுகவின் தோழமை கட்சிகள் வெற்றி வாய்ப்பு கருதி உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டதாகவும், திமுகவின் நிர்பந்தத்தால் அது நடக்கவில்லை என தெரிவித்துள்ளார். மக்கள் மனதில் இடம்பெற்ற ஒரு சின்னத்தில் போட்டியிட தோழமை கட்சிகள் முன்வரும் போது அதனை வழங்குவது கடமை என்றும்,நட்பின் அடிப்படையிலான இந்த செயலை நிர்ப்பந்திக்கிறோம் என கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுத்த சிலர் சதி செய்வதாகவும் ஸ்டாலின் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்