எம்.ஜி.ஆர் பிறந்த நாள் : "நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்" - அதிமுக அறிக்கை

அதிமுகவை வெற்றி பெற செய்ய எம்ஜிஆர் பிறந்த நாளில் சபதம் ஏற்குமாறு, அதிமுக தலைமை கேட்டுக் கொண்டுள்ளது.
எம்.ஜி.ஆர் பிறந்த நாள் : நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம் - அதிமுக அறிக்கை
x
 இன்று எம்ஜிஆரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், அதிமுக கட்சித் தலைமை சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஒரு குடும்பத்தின் சுயநலத்திற்காகவும், சுரண்டல் சிந்தனைகளுக்காகவும், தமிழ் நாட்டையும், தமிழ் சமூகத்தையும் பலி கொடுத்து, அதிகாரத்தை அடைய துடிக்கும் தீய சக்தியின் அநியாயத்தை வெட்டி வீழ்த்தும் களம் தான் எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதே போல, திமுகவின் வன்முறை வெறியாட்டம் மீண்டும் தலைதூக்க முடியாத வண்ணம் தேர்தல் களத்தில் விழிப்புடன் செயல்படுமாறு தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ள அதிமுக தலைமை, நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம் நாளை நமதே என அறிக்கையை முடித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்