இலங்கையின் மாகாண ஒழிப்பு திட்டம்:"பிரதமர் மோடி எச்சரிக்க வேண்டும்" - தி.மு.க எம்.பி டி.ஆர்.பாலு வலியுறுத்தல்
பதிவு : டிசம்பர் 31, 2020, 04:27 PM
இலங்கையின் மாகாண ஒழிப்பு திட்டத்துக்கு பிரதமர் மோடி கடுமையான எச்சரிக்கை விடுக்க வேண்டும் என தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈழத்தமிழர்களை இரண்டாந்தரக் குடிமக்களாக்கும் வகையில்,  உள்நோக்கத்துடன் இந்த திட்டத்தை இலங்கை அரசு அறிவித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். ராஜபக்சே சகோதரர்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, ஈழத்தமிழர்களின் உரிமைகளை பறிக்கும் விதத்திலும் அவர்களின் சுயமரியாதை மற்றும் கண்ணியத்தைச் சீர்குலைக்கும் விதத்திலும் செயல்படுவதாக விமர்சித்துள்ள டி.ஆர்.பாலு, மாகாண ஒழிப்பு திட்டம் இந்தியா- இலங்கை உறவில் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளார். இந்த விஷயத்தில் பிரதமர் மோடி உடனடியாக தலையிட்டு, இலங்கையை கடுமையாக எச்சரிக்க வேண்டும் என டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

184 views

"முன்னோடி மாநிலம் தமிழகம்" ராகுல் காந்தி புகழாரம்

அனைத்து விஷயத்திலும் இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

142 views

பிற செய்திகள்

மக்களின் மனங்களை கவர்ந்த சாலமன் பாப்பையாவிற்கு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது

தனது வசிகர பேச்சால், மக்களின் மனங்களை கவர்ந்த சாலமன் பாப்பையாவிற்கு, மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

16 views

வடமாநில கும்பலின் சீர்காழி படுகொலைகள்- தமிழகத்தில் மீண்டும் பவாரியா கும்பலா?

சீர்காழியில் உள்ள ஒரு நகைக்கடை உரிமையாளர் வீட்டின் கதவை தட்டிய வடமாநில கும்பல், கதவை திறந்த அடுத்த கணமே அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு கொள்ளை அடித்த‌து

408 views

நினைவு இல்லமான ஜெயலலிதா வாழ்ந்த வீடு - அதிமுகவினரின் கோயில் என கட்சியினர் உருக்கம்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வீடு, நினைவில்லமாக திறந்து வைக்கப்பட்டது.

30 views

தைப்பூச திருவிழா - அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

77 views

சட்டமன்ற தேர்தல் - அலுவலர்களுக்கு பயிற்சி சத்யபிரதா சாகு துவக்கி வைத்தார்

வருகின்ற சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவின் போது, உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒரு மணி நேரம் பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டு வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும் என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

41 views

போதைக்காக மருந்து கடைகளை குறிவைத்த கொள்ளையன்

போதைக்காக சர்க்கரை நோயாளிகள் பயன்படுத்தும் மாத்திரையை குறிவைத்து திருடிய கொள்ளையனை போலீசார் சென்னையில் கைது செய்தனர்.

47 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.