திட்டமிட்டப்படி டிசம்பர் 31-ல் தேதி அறிவிப்பு வெளியாகும் - ரஜினிகாந்த் டுவிட்டரில் வெளியிடுவார் என தகவல்
பதிவு : டிசம்பர் 28, 2020, 04:15 PM
நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்க உள்ளதற்கான அறிவிப்பு திட்டமிட்டப்படி 31 ஆம் தேதி வெளியாகும் என அவரது தரப்பு தகவல்கள் உறுதியாக தெரிவித்துள்ளன.
நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதற்கான அறிவிப்பை டிசம்பர் 31ஆம் தேதியன்று வெளியிடுவதாக  கடந்த 3 ஆம் தேதி அறிவித்தார். இதற்கு ஏதுவாக அண்ணாத்த படத்தை விரைந்து முடித்துக்கொடுக்க படபிடிப்புக்காக ஐதராபாத்திற்கு சென்றார். அங்கு படக்குழுவை சேர்ந்த 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து ரஜினிக்கு பரிசோதனை செய்த போது தொற்று இல்லை என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் திடீரென அவருடைய ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டதும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நலம் சரியானதும் டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டார். அவர் ஒரு வார காலத்துக்கு வீட்டில் முழு ஓய்வில் இருக்கவேண்டும் என மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். இதனால் திட்டமிட்டப்படி 31 ஆம் தேதி கட்சி தொடங்குவது தொடர்பான அறிவிப்பு வெளியாகுமா என்ற குழப்பம் நேரிட்டது. இந்நிலையில், திட்டமிட்டப்படி 31-ஆம் தேதி அறிவிப்பு வெளியாகும் என்றும் ரஜினிகாந்த் டுவிட்டரில் அறிவிப்பை வெளியிடுவார் என்றும் ரஜினிகாந்த் தரப்பு தகவல்கள் உறுதியாக தெரிவித்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

சொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணம் - மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து

ஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.

197 views

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

181 views

"முன்னோடி மாநிலம் தமிழகம்" ராகுல் காந்தி புகழாரம்

அனைத்து விஷயத்திலும் இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

141 views

பிற செய்திகள்

தைப்பூச திருவிழா - அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

11 views

சட்டமன்ற தேர்தல் - அலுவலர்களுக்கு பயிற்சி சத்யபிரதா சாகு துவக்கி வைத்தார்

வருகின்ற சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவின் போது, உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒரு மணி நேரம் பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டு வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும் என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

34 views

போதைக்காக மருந்து கடைகளை குறிவைத்த கொள்ளையன்

போதைக்காக சர்க்கரை நோயாளிகள் பயன்படுத்தும் மாத்திரையை குறிவைத்து திருடிய கொள்ளையனை போலீசார் சென்னையில் கைது செய்தனர்.

33 views

நகைக்கடை உரிமையாளர் வீட்டில் பயங்கரம்

சீர்காழி அருகே நகைக்கடை அதிபரின் மனைவி மற்றும் மகனை 16 கிலோ தங்க நகைகளுக்காக வெட்டிக் கொலை செய்த வடமாநில கும்பலை சேர்ந்த ஒருவர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

81 views

சாலையில் சிதறிக்கிடந்த எஸ்பிஐ ஆவணங்கள்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, சாலையில் எஸ்பிஐ வங்கியின் பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமான முக்கிய ஆவணங்கள் சிதறிக்கிடந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

43 views

முடிவுக்கு வந்த 4 ஆண்டு சிறைவாசம் - விடுதலையானார் சசிகலா

சொத்து வழக்கில் நான்காண்டு சிறைத் தண்டனை முடிவடைந்த நிலையில், ஜெயலலிதாவின் தோழி சசிகலா இன்று விடுதலையானார்.

118 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.