ஜம்மு காஷ்மீரில் ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடக்கம் - காணொலி வாயிலாக பிரதமர் தொடங்கி வைத்தார்

உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் உள்ளதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடக்கம் - காணொலி வாயிலாக பிரதமர் தொடங்கி வைத்தார்
x
ஜம்மு-காஷ்மீரில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இந்த திட்டம் மூலம் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த அனைத்து மக்களுக்கும் 5 லட்சம் ரூபாய் வரை இலவச சுகாதாரக் காப்பீடு வழங்கப்படுகிறது. பின்னர் பேசிய பிரதமர் மோடி, புதுச்சேரியில் கடைசியாக கடந்த 2006ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றதாக தெரிவித்தார். மேலும், 2011 ம் ஆண்டே புதுச்சேரியில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் முடிந்துவிட்டதாக குறிப்பிட்ட பிரதமர், நீதிமன்றம் உத்தரவிட்டும் ஆளும் காங்கிரஸ் அரசு தேர்தலை நடத்தாமல் இருப்பதாக குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டு ஓர் ஆண்டிலேயே ஜம்மு காஷ்மீரில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டுள்ளதாக கூறினார். ஆனால், சில அரசியல் கட்சிகள் ஜனநாயகம் குறித்து தொடர்ந்து பாடம் நடத்தி வருவதாகவும், அவர்களின் போலித் தனத்தை கண்டு கொள்ளுமாறும் பிரதமர் மோடி தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்