2021 சட்டமன்றத் தேர்தல் - களைகட்டிய தேர்தல் களம்
பதிவு : டிசம்பர் 19, 2020, 09:43 AM
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்கள் உள்ள நிலையில் தற்போதே அரசியல் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கி அரசியல் களத்தை பரபரப்பாக்கி உள்ளனர்.
தமிழகம் மீட்போம் என்ற பெயரில், காணொலி காட்சி மூலமாக பிரச்சாரத்தை நவம்பர் 1 ல் ஈரோட்டிலிருந்து தொடங்கினார்  திமுக தலைவர் ஸ்டாலின். நவம்பர் 20 ஆம் தேதி திருக்குவளையில் உதயநிதி ஸ்டாலினை களத்தில் இறக்கி தனது நேரடி பிரச்சாரத்தை தொடங்கியது திமுக.

அத்துடன் "விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்" என்ற மெகா பிரச்சாரத்தையும் தொடங்கியது. இதன் மூலம் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி, திருச்சி சிவா, திண்டுக்கல் லியோனி, பொன்முடி உள்ளிட்ட 15 திமுக முன்னணியினர் தமிழகமெங்கும் 75 நாட்களில் 234 தொகுதிகளுக்கும் சென்று 1500 பொதுக்கூட்டங்களை நடத்தி மக்களை சந்திக்கின்றனர்.

நவம்பர் 21 ல் தமிழகம் வந்த அமித்ஷா முன்னிலையில் அதிமுக-பாஜக கூட்டணி தொடரும் என கூறி கூட்டணியை உறுதி செய்து தேர்தல் களத்தை மேலும் சூடாக்கியது அதிமுக.

இந்நிலையில் "சீரமைப்போம் தமிழகத்தை" எனும் பெயரில்  பிரச்சார களத்தில் குதித்தார் மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன். மதுரையில் டிசம்பர் 13ல் தொடங்கிய பிரச்சாரத்தில் - எம்.ஜி.ஆரின் நீட்சி, எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசு என்று கூறி அரசியல் களத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தினார் கமல். திறந்த வெளி அரசியல் கூட்டங்களுக்கு அரசின் அனுமதியை தொடர்ந்து இன்னும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது தேர்தல் பிரச்சாரம்.

வேளாண் சட்டங்களை எதிர்த்து திமுக நடத்திய போராட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்களை ஒரே மேடையில் அமர வைத்து தனது கூட்டணியை உறுதியாக்கியுள்ளது திமுக. இந்த நிலையில் மாவட்டம்தோறும் கொரோனா ஆய்வுகூட்டங்களை நடத்தி வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி,  சனிக்கிழமையன்று, தனது சொந்த தொகுதியான எடப்பாடியிலிருந்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளார். .

ஜனவரி முதல் ஸ்டாலின், ரஜினிகாந்த் போன்றோர் பிரச்சாரத்தை தொடங்க உள்ள நிலையில்  மற்ற கட்சியினரும் தங்கள் பிரச்சாரத்திற்கு ஆயத்தமாகி வருகின்றனர்.பொதுவாக மார்ச், ஏப்ரல் மாதங்களில்தான் நேரடி தேர்தல் பிரச்சாரம் தொடங்கும். ஆனால் தற்போது  2021 தேர்தல் பிரச்சாரம் முன்கூட்டியே தொடங்கி இருப்பதன் மூலம் அரசியல் களத்தில் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது.



தொடர்புடைய செய்திகள்

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா?

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா? | சிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி - அ.தி.மு.க || மனுஷ்யப்புத்திரன் - தி.மு.க || விஜயதாரணி - காங்கிரஸ் || யுவராஜா - த.மா.கா

232 views

சொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணம் - மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து

ஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.

197 views

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

181 views

"முன்னோடி மாநிலம் தமிழகம்" ராகுல் காந்தி புகழாரம்

அனைத்து விஷயத்திலும் இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

141 views

பிற செய்திகள்

சட்டமன்ற தேர்தல் - அலுவலர்களுக்கு பயிற்சி சத்யபிரதா சாகு துவக்கி வைத்தார்

வருகின்ற சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவின் போது, உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒரு மணி நேரம் பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டு வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும் என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

32 views

போதைக்காக மருந்து கடைகளை குறிவைத்த கொள்ளையன்

போதைக்காக சர்க்கரை நோயாளிகள் பயன்படுத்தும் மாத்திரையை குறிவைத்து திருடிய கொள்ளையனை போலீசார் சென்னையில் கைது செய்தனர்.

33 views

நகைக்கடை உரிமையாளர் வீட்டில் பயங்கரம்

சீர்காழி அருகே நகைக்கடை அதிபரின் மனைவி மற்றும் மகனை 16 கிலோ தங்க நகைகளுக்காக வெட்டிக் கொலை செய்த வடமாநில கும்பலை சேர்ந்த ஒருவர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

81 views

சாலையில் சிதறிக்கிடந்த எஸ்பிஐ ஆவணங்கள்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, சாலையில் எஸ்பிஐ வங்கியின் பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமான முக்கிய ஆவணங்கள் சிதறிக்கிடந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

42 views

முடிவுக்கு வந்த 4 ஆண்டு சிறைவாசம் - விடுதலையானார் சசிகலா

சொத்து வழக்கில் நான்காண்டு சிறைத் தண்டனை முடிவடைந்த நிலையில், ஜெயலலிதாவின் தோழி சசிகலா இன்று விடுதலையானார்.

117 views

இந்து கடவுள் பற்றி இழிவாக பேசுவதாக புகார் - திராவிடர் கழக கூட்டத்திற்கு பாஜக எதிர்ப்பு

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே திராவிடர் கழகம் சார்பில் கூட்டம் நடத்த பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் போலீசார் குவிக்கப்பட்டனர்.

24 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.