பாரம்பரியம் என்றால் சிலருக்கு குடும்பமும், குடும்ப பெயரும் தான் - காங்கிரஸ் கட்சியை மறைமுகமாக விமர்சித்த பிரதமர் மோடி

ஒரு சிலருக்கு அவர்களின் குடும்பப் புகைப்படங்கள் தான் பாரம்பரியம் என காங்கிரஸ் கட்சியை பிரதமர் மோடி மறைமுகமாக விமர்சித்தார்.
பாரம்பரியம் என்றால் சிலருக்கு குடும்பமும், குடும்ப பெயரும் தான் - காங்கிரஸ் கட்சியை மறைமுகமாக விமர்சித்த பிரதமர் மோடி
x
வாரணாசியில் உற்சாகமாக கொண்டாடப்படும் உலகப் புகழ்பெற்ற தீபங்களின் பண்டிகையான தேவ் தீபாவளி கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். முன்னதாக படகில் பயணித்து கங்கை நதியை அவர் ஆய்வு செய்தார். பின்னர், ராஜ்காட்டில் விளக்கை ஏற்றி வைத்து விழாவை தொடக்கி வைத்து பிரதமர் உரையாற்றினார். அப்போது அவர், நமது இந்தியாவின் மிகப் பழமையான சிலைகள், நமது விலைமதிப்பில்லாத பாரம்பரியம் மற்றும் நம்பிக்கையின் அடையாளமாக திகழ்வதாக குறிப்பிட்டார். இதற்கு முன் இருந்த  பிரதமர் பல முயற்சிகளை எடுத்திருந்தால், நாடு மிகப் பழமையான பல சிலைகளை இந்தியா கொண்டு வந்திருக்கும் என பிரதமர் மோடி குறிப்பிட்டார். நம்மைப் பொறுத்தவரை பாரம்பரியம் என்றால் அது நாட்டின் பாரம்பரியம் என மோடி தெரிவித்தார்.  ஆனால் ஒரு சிலருக்கு   குடும்பப் புகைப்படங்கள் தான் பாரம்பரியம் என காங்கிரஸ் கட்சியை மறைமுகமாக விமர்சித்தார். முன்னதாக, விழாவில் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளை அவர் ரசித்து பார்த்தார் .  

Next Story

மேலும் செய்திகள்