புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விளக்கம்

நிவர் புயல் காரணமாக, நாளை தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விளக்கம்
x
நிவர் புயல் நெருங்குவதை ஒட்டி, தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சென்னை சேப்பாக்கத்தில் இயங்கி வரும் மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தை முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு செய்தார். அங்கு, நிவர் புயல் மையம் கொண்டுள்ள இடம், காற்றின் வேகம் எவ்வாறு உள்ளது, நிவர் புயலின் தற்போதைய நிலை என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அதிகாரிகளிடம் முதலமைச்சர் பழனிசாமி கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 4 ஆயிரத்து 133 இடங்கள் புயல் பாதிக்க கூ​டிய இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது என்றார். நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக நாளை தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். மேலும், மழை பொழிவை பொறுத்தே, செம்பரம்பாக்கம் ஏரியை திறப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.



Next Story

மேலும் செய்திகள்