"தமிழகத்திற்கு திமுக செய்தது என்ன....?" - திமுகவிற்கு அமித்ஷா சவால்
பதிவு : நவம்பர் 21, 2020, 11:11 PM
மாற்றம் : நவம்பர் 21, 2020, 11:14 PM
10 ஆண்டுகளாக, மத்திய அரசில் அங்கம் வகித்தபோது, தமிழகத்திற்கு செய்தது என்ன என்பதை பட்டியலிட தயாரா என, உள்துறை அமைச்சர் அமித்ஷா சவால் விடுத்துள்ளார்.
பாஜக தமிழகத்தை வஞ்சித்ததாக கூறி வரும் திமுக, 
10 ஆண்டுகளாக, மத்திய அரசில் அங்கம் வகித்தபோது, தமிழகத்திற்கு செய்தது என்ன என்பதை பட்டியலிட தயாரா என,  உள்துறை அமைச்சர் அமித்ஷா சவால் விடுத்துள்ளார்.குடும்ப அரசியல் நடத்தி வரும் கட்சிகளுக்கு மக்கள் பாடம் புகட்டி வருகிறார்கள் என்று கூறிய அவர், தமிழகத்திலும் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என தெரிவித்தார்.
ரூ.67,378 கோடி மதிப்பு உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அமித்ஷா அடிக்கல்
புதிய நீர்தேக்க திட்டத்தை மக்களுக்கு அர்ப்பணித்தார்
காவிரி ஆற்றின் குறுக்கே கதவணையை துவக்கி வைத்தார்
\இதனைத் தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டத்தில் 380 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை புதிய நீர்தேக்க திட்டத்தை மக்களுக்கு அர்ப்பணித்த அமித்ஷா, பின்னர் பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். கரூர் நஞ்சைபுகளூரில் 406 கோடி மதிப்பில் காவிரி ஆற்றின் குறுக்கே 
கட்டப்பட உள்ள கதவணைக்கு அவர் அடிக்கல் நாட்டினார். மேலும் 61 ஆயிரத்து 483 கோடி மதிப்பில், சென்னை மெட்ரோ ரயிலின் 2ஆம் கட்ட திட்டம், கோவை அவிநாசி சாலையில் 1,620 கோடியில் உயர்மட்ட பால திட்டம்,  சென்னை வர்த்தக மையத்தை 309 கோடி ரூபாயில் விரிவுபடுத்தும் திட்டத்திற்கும் அமித்ளா அடிக்கல் நாட்டினார். மேலும்,  900 கோடி ரூபாயில் வல்லூரில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பெட்ரோலிய முனையம் மற்றும் அமுல்லைவாயிலில் 1400 கோடி ரூபாயில் Lube Plant அமைக்கும் திட்டம், காமராஜர் துறைமுகத்தில் 900  கோடி ரூபாயில் இறங்குதளம் அமைக்கும் திட்டத்திற்கும் மத்திய அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டினார்.
எம்ஜிஆர்,  ஜெயலலிதா உருவப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை
நினைவு பரிசு வழங்கி கெளரவித்தனர், முதல்வர்,  துணை முதல்வர்
தமிழகத்தில் புதிய நீர்த்தேக்கத்தை திறந்து வைத்ததுடன்,  இரண்டாம் கட்ட மெட்ரோ  ரயில் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டினார்.
சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த அரசு விழாவில் பங்கேற்ற அவர், மேடையில் வைக்கப்பட்டிருந்த மறைந்த முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., 
மற்றும் ஜெயலலிதாவின் உருவப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் மரியாதை செலுத்தினர். இதையடுத்து, அமித்ஷாவுக்கு, நினைவுப்பரிசாக விநாயகர் சிலையை,  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். நடராஜர் சிலையை நினைவுப்பரிசாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அமித்ஷாவுக்கு வழங்கினார். 
தொடர்புடைய செய்திகள்

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விளக்கம்

நிவர் புயல் காரணமாக, நாளை தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

379 views

தனியார் மருத்துவ கல்லூரி கட்டண நிர்ணயம் - குளறுபடி

தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணங்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

323 views

"அமெரிக்கா, இந்தியா உறவை வலுப்படுத்துவோம்" - மோடியின் வாழ்த்துக்குப் பின் ஜோ பைடன் உறுதி

அமெரிக்கா - இந்தியா இடையிலான உறவை வலுப்படுத்துவதில் முனைப்பு காட்டுவதாக, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்

236 views

பிற செய்திகள்

புதுக்கோட்டை மாவட்டம் - யாருக்கு வாய்ப்பு?

2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட யாருக்கு வாய்ப்பு அதிகம் என்பதை தந்தி டிவி ஆராய்ந்து வருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்ட நிலவரத்தை பார்க்கலாம்...

24 views

"மெரினா உள்ளிட்ட கடற்கரைகள் டிச.14 முதல் மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதி"

சென்னை மெரினா உள்ளிட்ட கடற்கரைகள் டிசம்பர் 14ஆம் தேதி முதல் மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

180 views

கட்சி குறித்து தானே அறிவிப்பதாக ரஜினி பேச்சு - பொறுமையாக இருங்கள் - ரஜினி வேண்டுகோள்

சென்னையில், மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்திய ரஜினிகாந்த், அரசியல் கட்சி தொடர்பாக தானே முடிவெடுத்து அறிவிக்கும் வரை பொறுமையாக இருக்குமாறு வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

120 views

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட 15 வயது சிறுமி: நாளொன்றுக்கு 5 முதல் 8 பேர் வரை வன்கொடுமை - 400-க்கும் மேற்பட்டவர்கள் சீரழித்த கொடூரம்

சென்னையில் 15 வயது சிறுமி 400க்கும் மேற்பட்ட மனித மிருகங்களால் சீரழிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

23538 views

கார்த்திகை தீபமேற்றி குழந்தைகள், இளம்பெண்கள், இல்லதரசிகள் வழிபாடு

திருக்கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு, குடும்பமாக ஒன்றுகூடிய பெண்கள், வீட்டில் நன்மை ஒளி பரவவேண்டி தீபமேற்றி வழிபட்டனர்.

66 views

தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற வளாகத்திற்கு ஜெயலலிதா பெயர் - பிப்.24-ம் தேதி ஜெயலலிதா சிலை திறப்பு என தகவல்

மெரினா கடற்கரை சாலையில் உள்ள தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்திற்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பெயர் மற்றும் சிலை விரைவில் நிறுவப்படவுள்ளது.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.