தேசிய ஒற்றுமை தின கொண்டாட்டம் - பாரதியின் கவிதையை மேற்கோள்காட்டி பிரதமர் பேச்சு

சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாள் விழாவில், பாரதியாரின் பாடலை மேற்கோள் காட்டி பிரதமர் மோடி பேசினார்..
தேசிய ஒற்றுமை தின கொண்டாட்டம் - பாரதியின் கவிதையை மேற்கோள்காட்டி பிரதமர் பேச்சு
x
சுதந்திர இந்தியாவின் முதல் துணை பிரதமரான சர்தார் வல்லபாய் பட்டேலின் 145 வது பிறந்த தினம் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி,  குஜராத் மாநிலம், கெவடியாவில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேலின் மிக பிரமாண்டமான சிலையான 'ஒற்றுமை சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கு நடந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி,  தேசியக் கவி மகாகவி பாரதியாரின், 'மன்னும் இமயமலை எங்கள் மலையே...' என்ற கவிதையை மேற்கோள் காட்டினார்.  கிராமங்களில் இருந்து நகரம் வரையில், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையில், கிழக்கிலிருந்து மேற்கு வரையில் ஒரே இந்தியா சிறந்த இந்தியா என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார். மேலும், சர்தார் வல்லபாய் படேலின் ஒரே இந்தியா கனவை நிறைவேற்ற பாஜக அரசு தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். 

சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த தினம் இன்று - ஒற்றுமையின் சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை 

முன்னதாக, சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.  இதனை தொடர்ந்து சிலை அமைந்துள்ள பகுதியில் நடைபெற்ற தேசிய ஒற்றுமைக்கான அணிவகுப்பு மரியாதையை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுக் கொண்டார். 

கலை நிகழ்ச்சிகள்- கைத்தட்டி ரசித்த பிரதமர்

பின்னர் அங்கு நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை, கண்டு களித்த பிரதமர் ​​மோடி, மேடையில் அமர்ந்தபடி, கைத்தட்டி ரசித்தார்.






Next Story

மேலும் செய்திகள்