முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் தவுசாயி அம்மாள் காலமானார் - சிலுவம்பாளையத்தில் உடல் தகனம்
பதிவு : அக்டோபர் 13, 2020, 11:46 AM
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயி அம்மாளின் இறுதிச் சடங்குகள், சேலம் அருகே சிலுவம்பாளையத்தில் நடைபெற்றது.
முதலமைச்சர்  எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் தவுசாயி அம்மாள், நள்ளிரவில் காலமானார். தாயாரின் மறைவு செய்தி கேட்டு சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு காரில் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தாயாரின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். தவசாயி அம்மாள் உடலுக்கு அமைச்சர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்திய நிலையில், தவுசாயி அம்மாளின் இறுதிச் சடங்குகள் இன்று காலை நடைபெற்றது. வீட்டில் இருந்து அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் நடந்து சென்றனர். இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

சேலம் மாவட்டம் சிலுவம்பாளையம் மயானத்துக்கு ​இறுதி ஊர்வலம் சென்றடைந்ததும், அங்கு தவுசாயி அம்மாளின் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. தவுசாயி அம்மாள் இறுதி ஊர்வலத்தில் திரளான மக்கள் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயி அம்மாளின் மறைவுக்கு, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தொலைபேசி வாயிலாக இரங்கல் தெரிவித்துக் கொண்டார். முதல்வரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு துணை முதல்வர் பேசினார். அப்போது முதல்வரின் தாயார் மறைவுக்கு இரங்கலை தெரிவித்துக் கொண்டார். இதனிடையே இன்று மதியம் சாலை வழியாக சேலம் செல்லும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், முதல்வரை நேரில் சந்தித்து இரங்கல் தெரிவிக்க உள்ளார்.

முதல்வரின் தாயார் மறைவுக்கு தமிழிசை இரங்கல்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயி அம்மாளின் மறைவுக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர ராஜன் இரங்கல் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள இரங்கல் செய்தியில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தாயார் தவசாயி அம்மாள் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன் என்றும், அவரை இழந்து வாடும் தமிழக முதலமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

"தாயை "இழந்து வாடும் முதல்வருக்கு ஆறுதல்" - திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயி அம்மாள் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள இரங்கல் செய்தியில், முதலமைச்சரின் தாயார் இறந்த துயரச் செய்தி கேட்டு மிகுந்த மனவேதனைக்கு உள்ளானதாக குறிப்பிட்டு உள்ளார். தவுசாயி அம்மாளை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

"சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்" - நடிகை ராஷ்மிகா

தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் அளித்த பேட்டியில், ஒருவரின் அழகு தன்னம்பிக்கையில் தான் தெரியும் என கூறியுள்ளார்.

606 views

எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவை அடுத்து நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் ஆளுநர்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவை அடுத்து, தமிழக ஆளுநர் முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்

220 views

இலங்கையில் 20-வது திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு - தமிழ் தேசிய கூட்டமைப்பினர் விளக்குகளை அணைத்து போராட்டம்

இலங்கை அரசு கொண்டு வரும் 20-வது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக, விளக்குகளை அனைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்துள்ளனர்.

155 views

பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 3 பெண்கள் உள்பட 5 பேர் பலி

மதுரை மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

102 views

தேவாலயத்தில் 3 பேர் கத்தியால் குத்தி கொடூர கொலை - பிரான்சில் அதிகரிக்கும் கொலையால் மக்கள் அச்சம்

பிரான்சில் உள்ள தேவாலயம் ஒன்றில் 3 பேர் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளனர்.

22 views

மதுரை எய்ம்ஸ் உறுப்பினர் நியமனத்துக்கு எதிர்ப்பு

மதுரை எய்ம்ஸ் உறுப்பினர் நியமனத்தை எதிர்த்து இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடத்தினர்.

19 views

பிற செய்திகள்

ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் - ராமதாஸ்

ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையாகி தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி வருவது மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

9 views

சட்ட விரோதமாக மதுவிற்பனை - 3 பேர் கைது

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

10 views

மலை கிராமங்களில் காட்டு யானைகள் அட்டகாசம்

கொடைக்கானல் கீழ்மலை பகுதிகளான அஞ்சுவீடு, பேத்துப்பாறை ,கேசி.பட்டி , பாச்சலூர் உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் மக்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர்.

108 views

கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக மக்கள் நேசிக்கும் அடுத்த முதல்வர் என பேனர் வைப்பு

கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது அலுவலகத்தில் தமிழக மக்கள் நேசிக்கும் அடுத்த முதல்வர் என பேனர் வைக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் வரும் 7ம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாட உள்ளார்

204 views

"அமைச்சர் துரைகண்ணு மிகவும் கவலைக்கிடம்" - மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியீடு

கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் துரைகண்ணு, மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியாகி உள்ளது.

50 views

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் நஷ்டம் - 28 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

கோவையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஏற்பட்ட நஷ்டத்தால் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

192 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.