பீகார் தேர்தல் : 2வது கட்ட பா.ஜ.க. வேட்பாளர்கள் அறிவிப்பு

பீகார் சட்டசபை தேர்தலில் 2-வது கட்டமாக, தேர்தல் நடைபெறும் தொகுதிகளுக்கான 46 வேட்பாளர்களை பாரதிய ஜனதா கட்சி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
பீகார் தேர்தல் : 2வது கட்ட பா.ஜ.க. வேட்பாளர்கள் அறிவிப்பு
x
பீகார் சட்டசபை தேர்தலில் 2-வது கட்டமாக, தேர்தல் நடைபெறும் தொகுதிகளுக்கான 46 வேட்பாளர்களை பாரதிய ஜனதா கட்சி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதன்படி, Bettiah தொகுதியில் ரேணுதேவி போட்டியிடுகிறார். பைகுந்த்பூர் தொகுதியில் மிதிலேஷ் திவாரி, தனபூர் தொகுதியில் ஆஷா சின்ஹா உள்ளிட்டோர் களம் இறக்கப்பட்டுள்ளனர். மேலும், பீகார் தேர்தல் பிரசாரத்துக்கான 30 நட்சத்திர பேச்சாளர்களையும் பாஜக அறிவித்துள்ளது. இதில் பிரதமர் மோடி, ஜே.பி. நட்டா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், அமித்ஷா, ஸ்மிருதி இரானி, உபி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.



Next Story

மேலும் செய்திகள்