"தொல்லியல் துறை முதுகலைப் படிப்புக்கான கல்வித்தகுதியில் தமிழ் சேர்க்கப்பட வேண்டும்"
பதிவு : அக்டோபர் 08, 2020, 06:05 PM
தொல்லியல் துறை சார்பில் நடத்தப்படும் முதுகலை பட்டப்படிப்புக்கான கல்வித் தகுதியில் தமிழ் சேர்க்கப்பட வேண்டும் என, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.
தொல்லியல் துறை சார்பில் நடத்தப்படும் முதுகலை பட்டப்படிப்புக்கான கல்வித் தகுதியில் தமிழ் சேர்க்கப்பட வேண்டும் என, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, அறிக்கை வெளியிட்டுள்ள அவர், மத்திய தொல்லியல் துறை சார்பில் இயங்கிவரும் பண்டிட் தீனதயாள் உபாத்யாயா தொல்லியல் கல்லூரியில், முதுகலை பட்டப்படிப்புக்கான விண்ணப்பங்களை வரவேற்று கல்லூரி நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் தமிழ் மொழி இடம் பெறாதது கண்டனத்திற்குரியது என குறிப்பிட்டுள்ளார். மேலும்,  செம்மொழியான தமிழ் மொழியைப் புறக்கணித்திருப்பது, தமிழர்களுக்கான வாய்ப்புகளைப் பறிக்கும் செயல் மட்டுமன்றி, தமிழர்களின் பண்டைய கலாச்சார, நாகரிக, வரலாற்று அடையாளங்களை மறைக்கும் செயல் என்வும் தெரிவித்துளார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.