உ.பி பாலியல் வன்கொடுமை : கண்டன பேரணி நடத்திய கனிமொழி உள்ளிட்டோர் கைதாகி விடுதலை
பதிவு : அக்டோபர் 06, 2020, 08:22 AM
தமிழக ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக சென்ற திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்ட மகளிர் அணியினரை கைது செய்த காவல்துறை, ஒரு மணி நேரத்திற்கு பிறகு விடுதலை செய்தது.
தமிழக ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக சென்ற திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்ட மகளிர் அணியினரை கைது செய்த காவல்துறை, ஒரு மணி நேரத்திற்கு பிறகு விடுதலை செய்தது. ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமையை கண்டித்து, தி.மு.க. மகளிர் அணி சார்பில் சென்னை சைதாப்பேட்டையில் பேரணி நடைபெற்றது.  அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்த போலீசார், அனைவரையும் சின்னமலை பகுதியில் உள்ள ஒரு  சமுதாய கூடத்தில் தங்க வைத்திருந்தனர். பின்னர் அனைவரையும் சுமார் ஒரு மணி நேரம் கழித்து போலீசார் விடுதலை செய்தனர். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.