கடந்த வாரம் மோடியை விட ராகுலின் பேஸ்புக் பக்கத்தை கூடுதலாக பார்வையிட்ட 40% பேர்
பேஸ்புக்கில் 4.59 கோடி பேர் மோடியை பின் தொடர்கின்றனர். 35 லட்சம் பேர் ராகுலை பின் தொடர்கின்றனர்.
பேஸ்புக்கில் 4.59 கோடி பேர் மோடியை பின் தொடர்கின்றனர். 35 லட்சம் பேர் ராகுலை பின் தொடர்கின்றனர். இந்நிலையில், செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 2 வரையில், ராகுல் காந்தியின் பேஸ்புக் பக்கத்திற்கு, பிரதமர் மோடியின் பேஸ்புக் பக்கத்தை விட 40 சதவீதம் அதிக பார்வையாளர்களின் செயல்பாடுகள் நடந்து உள்ளதாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. பேஸ்புக் அனலிடிக்ஸ் தரவுகளின் மூலம் சேகரிக்கப்படும் இந்த தரவுகள் லைக்குகள், பின்னூட்டங்கள், பகிர்தல்கள் போன்றவற்றின் அடிப்படையில் கணக்கிடப்படுவதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது. சென்ற வாரம் ராகுல் காந்தியின் பேஸ்புக் பக்கத்தில் 1.39 கோடி பார்வையாளர்கள் இத்தகைய செயல்பாடுகளை முன்னெடுத்து உள்ளதாகவும் , மோடியின் பேஸ்புக் பக்கத்தில் 82 லட்சம் பார்வையாளர்கள் இத்தகைய செயல்பாடுகளை முன்னெடுத்து உள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. உத்தரப் பிரதேத்தில் ஹாத்ராஸில் தலித் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு ராகுல் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
Next Story

