"ரயில் டிக்கெட் முன்பதிவு தொடர்பான தகவல்கள்...ஆங்கிலம், உள்ளூர் மொழியில் அனுப்ப உத்தரவிடுக" - ரயில்வே அமைச்சருக்கு டி.ஆர்.பாலு கடிதம்

ரயில் டிக்கெட் முன்பதிவு தொடர்பான தகவல்களை ஆங்கிலம் மற்றும் உள்ளூர் மொழியில் அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலுக்கு, நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு கடிதம் எழுதி உள்ளார்.
ரயில் டிக்கெட் முன்பதிவு தொடர்பான தகவல்கள்...ஆங்கிலம், உள்ளூர் மொழியில் அனுப்ப உத்தரவிடுக - ரயில்வே அமைச்சருக்கு டி.ஆர்.பாலு கடிதம்
x
கடந்த 2 நாட்களாக தெற்கு ரயில்வே, பயணிகளுக்கு இருக்கை முன் பதிவு தொடர்பாக இந்தி மொழியில் எஸ்எம்எஸ் மூலம் தகவல் தெரிவித்து வருவது தமிழக ரயில் பயணிகள் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு, திமுக பொருளாளரும், அக்கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில், தெற்கு ரயில்வே நிர்வாகத்தின் இந்தி திணிப்பு முயற்சி கண்டிக்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார்.  எனவே, ரயில்வே அமைச்சர் என்ற முறையில், இந்த பிரச்சினையில் தனி கவனம் செலுத்தி, ரயில் டிக்கெட் முன்பதிவு தொடர்பான எஸ்எம்எஸ் விஷயத்தில் ஆங்கிலத்தில் தகவல் அனுப்பும் பழைய நடைமுறையை கொண்டு வருவதுடன், தமிழ் உள்ளிட்ட ஏனைய மொழிகளிலும் குறுஞ்செய்தி அனுப்ப வழிவகை செய்ய வேண்டும் என்று டி.ஆர்.பாலு கேட்டுக்கொண்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்