"ஆட்சிக்கு வரும்போது வேளாண் சட்டங்களை ரத்து செய்வோம்" - பஞ்சாப்பில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி உறுதி

காங்கிர​ஸ் ஆட்சிக்கு வரும்போது 3 வேளாண் மசோதாக்களையும் குப்பையில் வீசுவோம் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ஆட்சிக்கு வரும்போது வேளாண் சட்டங்களை ரத்து செய்வோம் - பஞ்சாப்பில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி உறுதி
x
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பஞ்சாப்பில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம், டிராக்டர் பேரணி மேற்கொள்ளப்படுகிறது. மோகாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்தார். அப்போது, காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போது நாங்கள் இந்த மூன்று சட்டங்களையும் ரத்து செய்வோம் என உறுதியளித்தார். மேலும் பேசுகையில், இந்த சட்டம் விவசாயிகளுக்கானது என்று பிரதமர் கூறுகிறார். பிறகு ஏன்...? வெளிப்படையாக அவையில் விவாதிக்கப்படவில்லை என கேள்வியை எழுப்பினார். சட்டங்களால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் என்றால், ஏன் அவர்கள் வீதியில் போராட வேண்டும் என்று சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்.


Next Story

மேலும் செய்திகள்