விடுதலை தேதி விவரங்களை - 3-வது நபர் யாருக்கும் கொடுக்கக் கூடாது - சசிகலா தரப்பு
பதிவு : செப்டம்பர் 24, 2020, 02:53 PM
ஆர்டிஐ சட்டத்தின் கீழ், தன்னை பற்றிய தகவல்களை மூன்றாவது நபருக்கு வழங்கக் கூடாது என சசிகலா ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.
சொத்து வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலா பற்றிய விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்டு வெளியிடப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த சசிகலா தரப்பு, சிறைத்துறைக்கு ஆட்சேபனை கடிதம் எழுதியுள்ளார். தன்னுடைய சிறைவாசம், விடுதலை தேதி உள்ளிட்ட விவரங்களை மூன்றாவது நபருக்கு வழங்கக் கூடாது எனக் கேட்டுக்கொண்டுள்ளார். வேதபிரகாஷ் ஆர்யாவின்  வழக்கில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை சுட்டிக்காட்டி, ஆர்டிஐ மூலம் இந்திய குடிமகனின் தகவல்களை பரிமாற இயலாது எனக் குறிப்பிட்டுள்ளார். இதையேற்ற கர்நாடகா சிறைத்துறை, சசிகலா குறித்து ஆர்டிஐ மூலம் நரசிம்மமூர்த்தியின் கேள்விக்கு பதில் அளிக்க மறுத்துவிட்டது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.