ஐ.நா.வின் 75-வது ஆண்டு விழா கூட்டம் - காணொலி மூலம் பிரதமர் மோடி உரை

சர்வதேச அளவிலான புதிய சவால்களை எதிர்கொள்ள ஐக்கிய நாடுகள் அவையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்வது அவசியம் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
ஐ.நா.வின் 75-வது ஆண்டு விழா கூட்டம் - காணொலி மூலம் பிரதமர் மோடி உரை
x
ஐ.நா.வின் 75வது ஆண்டு விழா மற்றும் பொது சபை கூட்டம் நேற்று தொடங்கியது. அதில் காணொலி மூலம் உரையாற்றிய பிரதமர் மோடி ஐ.நா. சாசனத்தில் கையெழுத்திட்டதன் மூலம் உலக நாடுகளின் நலன் சார்ந்த நடவடிக்கையில்   இந்தியாவும் பங்கேற்றுள்ளதாக தெரிவித்தார். இது உலகமே ஒரு குடும்பம் என்ற பொருள்படும் இந்தியாவின் வசுதைவ குடும்பகம் என்ற தத்துவத்தை பிரதிபலிப்பதாக பிரதமர் குறிப்பிட்டார். 

75 ஆண்டுகளுக்கு முன்பு போரின் கொடுமைகளில் இருந்து விடுபட்டு  உலகில் அமைதி நிலவ புதிய நம்பிக்கையாக ஐ.நா. சபை தோற்றுவிக்கப்பட்டதாகவும் பிரதமர் மோடி கூறினார். ஐ.நா. அமைதி நடவடிக்கைகளில் இந்தியா முக்கிய பங்களிப்பை ஆற்றியுள்ளதை சுட்டிக்காட்டிய  பிரதமர் மோடி ,இன்றைய சவால்களை காலாவதியான கட்டமைப்புகளுடன் எதிர்கொள்ள முடியாது என்று கூறினார்.மோதலை தடுக்கவும், வளர்ச்சியை உறுதி செய்யவும், நெருக்கடிகளை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளவும்  ஐ.நாவில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியது அவசியம் எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்